அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வசந்த முதலிகே மற்றும் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.