Wednesday 24th of April 2024 05:43:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!


ஆசியக் கிண்ண ரி - 20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இந்திய அணி அபார வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

விராட் கோலி 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

213 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 11 1ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், முஜிபுர் ரஹ்மான் 18 ஓட்டங்களையும், ரஷித் கான் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்

பந்துவீச்சில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 04 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் இவர் பெற்ற அதிக விக்கெட் எண்ணிக்கை இதுவாகும்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE