Wednesday 29th of November 2023 12:14:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள்நிர்ணய கலந்துரையாடல்!

பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள்நிர்ணய கலந்துரையாடல்!


தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று(28) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட எல்லை மறுசீரமைப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.

மேலும் கலந்துரையாடலின் இறுதியில் இறுதியான அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில் சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், நிர்வாக கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக பிரதேச செயலகங்களின் காணி தொடர்பான உத்தியோகத்தர்கள், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE