Thursday 28th of March 2024 06:30:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று


நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறை 2இல் குறித்த பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பேரவையினை பரிந்துரை செய்திருந்தார்.

இதன்அடிப்படையில் 35 பேர் கொண்ட தேசிய பேரவை யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் கடந்த 20ஆம் திகதி முன்வைத்திருந்தார்.

அந்த யோசனை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட அதன் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை அண்மையில் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த பேரவையில் தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டலஸ் அணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இணையவில்லை.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான தேசிய பேரவையில் நாடாளுமன்ற சபை முதல்வர், ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE