Friday 19th of April 2024 11:49:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச தகவல் உரிமை தினத்தில் வடமாகாண ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!

சர்வதேச தகவல் உரிமை தினத்தில் வடமாகாண ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!


சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை 9 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தகவல் சட்டத்தை கையாளுகையில் ஊடகவியலாளர்களுக்குள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன், தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஸாலி பின்ரோ, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, தகவலறியும் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்..ஆர்.பி. சத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராட்சி, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், தகவல் உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், வடமாகணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE