Friday 26th of April 2024 05:14:10 PM GMT

LANGUAGE - TAMIL
நினைவுகூரலை போராட்டவடிவமாக மாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம்!

நினைவுகூரலை போராட்டவடிவமாக மாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம்!


பேரன்பிற்குரியஉறவுகளேவரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலைஉச்சம் தொட்டநாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்ககொல்லப்பட்டமண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளைசுமந்துநிற்கின்றோம்.

தமிழர்களுக்குஎதிராகசிங்கள-பௌத்தசிறீலங்காபேரினவாதஅரசுவரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து,கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைகட்டம் கட்டமாகஅரங்கேற்றிவந்துள்ளது. இவ் இனப்படுகொலைமுள்ளிவாய்க்காலில் அதிஉச்சத்தைஅடைந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாககொல்லப்பட்டஎமதுஇரத்தஉறவுகளைநினைவுகூர்ந்துஅஞ்சலிசெலுத்துகின்றோம். கொல்லப்பட்டஎமதுஉறவுகளின் கனவுகளைநினைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒருதசாப்தத்தைநினைவுகூரும் ஒட்டுமொத்ததமிழினம் அவலங்களைமட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்தசிறிலங்காபேரினவாதஅரசின் அடக்குமுறைக்கெதிராகதமிழினம் வெகுண்டெழுந்தவரலாற்றையும் அவற்றின் வெவ்வேறுவடிவங்களையும், கூட்டுஉரிமைக்கானதியாகத்தையும் நினைவு கூருவதுஎம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.

தமிழர் உரிமைக்கானபோராட்டத்தைசிறிலங்காஅரசுபயங்கரவாதமுத்திரைகுத்திஅதன் நியாயத்தன்மையைகேள்விக்குட்படுத்திவந்துள்ளது.

சர்வதேசமயப்படுத்தப்பட்டபயங்கரவாதபிரச்சாரத்தினூடுஆயுதப்போராட்டவடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுதமௌனிப்பின் பின் தமிழர் போராட்டவடிவங்கள் வெவ்வேறுவழிகளில் முன்னெடுக்கப்பட்டன.

பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கானநீதிவேண்டியகோரிக்கைவலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காககொல்லப்பட்டார்கள்,சித்திரவதைசெய்யப்பட்டார்கள்,வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டார்கள்,வன்புணரப்பட்டார்கள். பூர்வீகவாழ்விடங்களிலிருந்துவிரட்டிஅடிக்கப்பட்டார்கள்.

தமிழர்கள் வந்தேறுகுடிகளாகசித்தரிக்கப்பட்டுசிறிலங்காசிங்கள-பௌத்ததேசம் அதுசிங்கள-பௌத்தர்களுக்குமட்டும் சொந்தமானதுஎனகாலணித்துவத்தில் கற்றுக்கொண்டபாடங்களின் அடிப்படையில் சிறிலங்காஅரசு நவ காலணித்துவத்தைகட்டமைத்தது.

இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பைகேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழினத்தின் மீதுநடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைஐ.நாவும் சர்வதேசசமூகமும் வெறுமனேஅவதானித்துக் கொண்டிருப்பதுகவலைக்குரியதானது.

பாதிக்கப்பட்டமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கானநீதிவேண்டிதமிழர்கள் ஒருதசாப்தகாலமாகஐ.நாவின்,சர்வதேசசமூகத்தின் உதவியைநாடியுள்ளார்கள்.

நடந்தேறியஅநீதிகளையும்,உரிமைமீறல்களையும் விசாரிப்பதற்கானசர்வதேசநீதிவிசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.

சிறிலங்காஅரசுபின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமானவடக்குகிழக்கில் சிங்கள-பௌத்தமயமாக்கத்தையும், இராணுவமயமாக்கத்தையும் விஸ்தரித்துஇராணுவ இருப்பைநியாயப்படுத்திதமிழ் மக்கள் மீதானஅடக்குமுறையைதொடர்ந்துகொண்டிருக்கின்றது.

தமிழர்களின் பூர்வீகநிலங்கள் படைத்தரப்பாலும்,மகாவலிஅபிவிருத்திதிட்டத்தாலும்,தொல்லியல்,வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர் மத்தியில் சிறிலங்காஅரசுபயத்தைதக்கவைத்துக் கொண்டுஉளவியல் யுத்தம் செய்துகொண்டிருக்கின்றது.

ஆயுதம் மௌனிக்கப்பட்டுஒருதசாப்தமாகியும் கைதுகளும்,எச்சரிக்கைகளும்,மிரட்டல்களும் தொடர்ந்தவண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கானவெளிநசுக்கப்பட்டுள்ளது.

ஒருதேசத்தின் கலை-கலாச்சாரபண்பாட்டுவிழுமியங்களைபேணிப்பாதுகாப்பதற்குஅடிப்படையானபூரணஅரசியல் சுதந்திரத்தைஅனுபவிப்பதென்பதுஎல்லாதேசங்களினதும் விட்டுக்கொடுக்கவேமுடியாதஅடிப்படைஉரிமையாகும்.

சமூககட்டுமானத்தின் அனைத்துஅடிப்படைஅம்சங்களிலும் சிங்களதேசத்தில் இருந்தும் தனித்துவமாகவேறுபடுத்திப்பார்க்கக் கூடியதனிசிறப்பியல்பானஅம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒருதேசமாகஅடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

சிங்களவருக்கு இருப்பதுபோன்றுஅதைவிடதொன்மையானதும் செழிப்பானதுமானவரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும்,சிங்களமொழியிலிருந்துமுற்றிலும் வேறுபட்டமிகத்தொன்மையானமொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடுகாலத்திற்கேற்றநவீனமாற்றங்களைதன்னகத்தேஉள்ளீர்த்துதனித்துவமானமொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்குபகுதியைதமிழ் தாயகமாகக் கொண்டுவரலாற்றுப்பூர்வகுடிகளாகவாழ்வதாலும்,சிங்களஅரசானதுதிட்டமிட்டகட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பைஅழிப்பதற்கானஎத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒருதசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கானஉரிமைமறுக்கப்பட்டுள்ளது.

நினைவு கூருவதுபாதிக்கப்பட்டமக்களின் உரிமை. நினைவு கூருவதற்கானஉரிமைமறுக்கப்படுவதுஉண்மையைமறுப்பதும் மறைப்பதுமாகும்.

சிறிலங்காஅரசுமறுப்புவாதத்தைநிறுவனமயப்படுத்திஉண்மைகளைவரலாற்றில் மறுத்துவந்துள்ளது. சாட்சியங்களைபொய்யர்களாக்கிஅவர்களின் நம்பகத்தன்மையைகேள்விக்குட்படுத்துகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்,கையளிக்கப்பட்டவர்களின் விசாரணைகிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றிவீரர்களாகஉலாவருகின்றனர்.

பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ளதமிழ் மக்களாகியநாங்கள் நினைவுகூரலைஅணிதிரட்டலாகமாற்றவேண்டியவரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தியமீட்பர்களைவிடுத்துமக்கள் சக்தியில் நம்பிக்கைவைத்து,நினைவு கூரலைசமூக இயக்கமாகமாற்றிசபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீதுசத்தியம் செய்வோம்.

 முள்ளிவாய்;க்கால் தமிழ் இனப்படுகொலைக்குசர்வதேசநீதிவேண்டி இனப்படுகொலையாளிகளைசர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த்தவும்

 தமிழர்கள் ஒருதேசஅங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும்தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பாரதீனப்படுத்தப்படமுடியாதசுயநிர்ணயஉரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியைஅங்கீகரிக்கவேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோரியும்

 தமிழர் இன அடையாள இருப்பின் மீதுகட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்கவும்

 தமிழர் சமூகஅமைப்புக்களைபலப்படுத்திவிடுதலைக்காகமுனைப்புடன் உழைக்கவும்

மக்கள் பலத்தைநம்பிநினைவுகூரலைபோராட்டவடிவமாக,சமூக இயக்கமாகமாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்குநினைவுகூரல் ஒருபோராட்டவடிவமே.

தமிழ்த் தேசியநினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரானஊடகம் என்பதைநினைவிற் கொண்டுஉறுதிபூணுவோம் தமிழர் உரிமையைவென்றெடுப்பதற்கானபயணிப்பில் இணைவோம். மே 18 இன்றையநாளை இனஅழிப்புக்குஎதிரானதமிழ் தேசஎழிச்சிநாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்குஎதிரானதும் அரசியல் நீதிக்கானசர்வதேசவலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்.

என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE