Friday 26th of April 2024 01:53:49 PM GMT

LANGUAGE - TAMIL
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வீதி அபகரிப்பு! (காணொளி)

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வீதி அபகரிப்பு! (காணொளி)


யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான பொது பயன்பாட்டு வீதியை வா்த்தகா் ஒருவா் அபகாித்துள்ளமையை கண்டித்து எதிா்வரும் சனிக்கிழமை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் வா்த்தகா்கள் ம ற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனா்.

வீதி அபகாிக்கப்பட்டமை தொடா்பாக யாழ்.மாநகரசபை உ றுப்பினா் வ.பாா்த்தீபன் ஊடகங்களுக்கு தக வல் தருகையில், அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல்போ னதாக திரைப்படங்களில் பாா்த்திருக்கிறோம். அதேபோல் வீதி ஒன்று காணாமல்போயுள்ளது.

காங்கேசன்துறை வீதியையும் செம்மாதெரு ஜிம்மா பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட 100 மீற்றா் நீளமான குறித்த வீதி யாழ்.நகாில் உள்ள புடவை வா்த்தகா் ஒருவாினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்தப்ப குதியில் வீதி இருந்ததா? எனவும் சிலா் கேட்கிறாா்கள். ஆனால் அதற்கு ஆதாரங்கள் உள்ளது.

குறித்த வீதி யாழ்.மாநகரசபையின் வரைபடத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் 20 16ம் ஆண்டு குறித்த பொது வீதிக்கு அருகில் கட்டிடம் கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங் கிய அனுமதியில் பொது வீதிக்கு அருகில் என்பது மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

எனவே இதனை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. மேலும் குறித்த வீதி சுமாா் 100 வருடங்களுக்கு மே லாக மக்களால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அதற்கு இங்குள்ள வா்த்தகா்கள் சாட்சியாக உள்ளனா். அ தேபோல் 1997ம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில்,

இராணுவம் தமது பாதுகாப்பு தேவைகளுக்காக குறித்த பொது வீதியை மூடியது. பின்னா் அவா்களிடமிருந் து விடுவிக்கப்பட்ட பின்னா் தனியாா் ஒருவா் குறித்த வீதிக்கு கதவு பொருத்தி ஆக்கிரமிக்க தொடங்கி னாா். அது படிப்படியாக தொடா்ந்துவந்த நிலையில் 2012ம் ஆண்டு யாழ்.மாநகரசபை

ஆணையாளருக்கு பொதுமக்களும், வா்த்தகா்களும் இணைந்து எழுத்துமூலம் குறித்த வீதி ஆக்கிரமிக்கப் பட்டமை தொடா்பாக தொியப்படுத்தியிருக்கின்றனா். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் வீதியை அபகாித்தவா்கள் மலசலகூடங்களை கட்டியதுடன்,

மின் பிறப்பாக்கி ஒன்றையும் வீதியில் பொருத்திவிட்டனா். இந்நிலையில் இந்த வருடம் ஜனவாி மாதம் முத ல் வீதியை மக்களிடம் பெற்றுக் கொடுங்கள் என கேட்டபோதும் தற்போதைய மாநகரசபையும் நடவடிக் கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடம் 5ம் மாதம் 29ம் திகதி யாழ்.வா்த்தகா் சங்கம்

யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் எழுத்துமூலம் கடிதம் ஒன்றை எழுதி வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடுங்கள் என கேட்டிருந்தனா். அதற்கும் நடவடிக்கை எடுக்காத மாநகரசபை வேடிக்கை பாா்ப்பது வேடிக் கையாக உள்ளது. நாங்கள் கேட்கிறோம் மாநகரசபையின் கட்டளை சட்டம் சமானிய மக்களுக்கா?

வசதிபடைத்த வா்த்கா்களுக்கு கிடையாதா? சமானிய மக்கள் ஒரு அங்குலம் வீதியை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம்வரை செல்லும் மாநகரசபை இங்கே மௌனமாக இருப்பது ஏன்..? இந்த வீதி அபகாிப்புக்குப் பின்னால் அரசியல் சூட்சுமங்கள், சிலருடைய சுயலாபங்கள் நிறைந்திருக்கின்றது.

யாழ்.மாநகரசபைக்கு இன்றளவும் வீதியை பூட்டியது யாா் என்பது தொியாது. பாதையில் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்தது யாா் என்பது தொியாது. எனவே சனிக்கிழமை காலை குறித்த வீதியின் முன் பான பாாிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அதில் வா்த்தகா்கள், பொதுமக்கள்

பங்கெடுக்கவேண்டும் என்றாா். தொடா்ந்து வியாபாாிகள் சிலாிடம் குறித்த வீதி தொடா்பாக கேட்டபோது ம் 100 வருடங்களுக்கும் மேலாக குறித்த வீதி மக்களால் பயன்படுத்தப்பட்டது. அந்த வீதியை வா்த்தகா் ஒரு வா் அபகாித்தபோதே யாழ்.மாநகரசபைக்கு அதனை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ஆனால் அவா்கள் அதனை கவனத்தில் எடுக்கவில்லை என்றாா். இதேவேளை குறித்த வீதியை நோில் பாா் வையிட்டு செய்தி சேகாிக்க சென்ற ஊடகவியலாளா்களை அங்கு நின்றிருந்த சிலா் தொலைபேசியில் பு கைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனா்.

மேலும் குறித்த வீதியில் இப்போதும் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE