Monday 6th of May 2024 11:23:30 AM GMT

LANGUAGE - TAMIL
இந்திய தேசிய ஹொக்கி வீரர்கள்  விபத்து!

இந்திய தேசிய ஹொக்கி வீரர்கள் விபத்து!


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்திய தேசிய ஹொக்கி அணி வீரர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தியான் சந்திர ஹொக்கி சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் இடார்சியில் இருந்து ஹோஷங்காபாத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்னானது.

விபத்தில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் உனடியாக வெளியிடப்படவில்லை.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE