Tuesday 30th of April 2024 11:53:45 AM GMT

LANGUAGE - TAMIL
youth with Talent வேலைத்திட்டத்தில் உழைத்தவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு!

youth with Talent வேலைத்திட்டத்தில் உழைத்தவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு!


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான youth with Talent வேலைத்திட்டத்தில் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துத் தந்த கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் உதயம் இளைஞர் கழகத்தினரின் “இயற்கை உரம் தயாரித்தல் வேலைத்திட்டத்தினை” முன்னெடுக்க இரவு பகல் பாராது உழைத்த இளைஞர் யுவதிகள் சுமார் நாற்பத்து ஐந்து பேரும், இவர்களுக்கான அறிவுரைகள் வழங்கிய பிரதேச செயலாளர் உள்ளடங்களாக அதிகாரிகளுக்குமான கௌரவிப்பு நிகழ்வு வரையறுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்டது

வரையறுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படட இந்த நிகழ்வானத்னது வரையறுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளருமான திருமதி சறோஜா குகனேசதாசன் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.ம.பிரதீபன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாகப்பிரிவு பிரதிப்பணிப்பாளர் திரு.எம்.பி.சரத்சந்திரபால மற்றும் தேசிய இளைஞர் கூட்டுறவு மற்றும் வியாபாரப் பிரிவு உதவிப்பணிப்பாளர் திரு.லால் ஹேமந்த, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.இ.பிதாபன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ம.உமாமகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பணிப்பாளர் திரு.ஐ.தவேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ .சந்திரரூபன், தேசிய சம்மேளன பிரதிநிதி செல்வி.ஜெ.தனுசியா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.மா.சசிக்குமார் ஆகிய அதிதிகளின் கலந்துகொண்டு சாதனை இளைஞர்கள் அதிகாரிகளுக்கு வெற்றி சான்றிதழ்கள் வெற்றி கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE