Friday 26th of April 2024 07:42:00 AM GMT

LANGUAGE - TAMIL
யானையையும் இதயத்தையும் கைவிட்டு அன்னத்தில் களமிறங்க  ரணில் - சஜித் இணக்கம்!

யானையையும் இதயத்தையும் கைவிட்டு அன்னத்தில் களமிறங்க ரணில் - சஜித் இணக்கம்!


எதிர்வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி 'அன்னம்' சின்னத்தில் கீழ் போட்டியிடுவதற்கு ரணில் மற்றும் சஜித் அணிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

ரணில் மற்றும் சஜித் ஆதரவு அணிகளின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கிடையில் இன்று மாலை சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சஜித் பிரேமதாஸ தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் சின்னமாக அன்னத்தை ஏற்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று மாலை அறிவித்துள்ளார்.

எனினும், சட்டரீதியிலான சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சின்னம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE