Friday 26th of April 2024 02:45:45 AM GMT

LANGUAGE - TAMIL
முதலாவது ஒருநாள் போட்டி; மேற்கிந்தியத்தீவுகள் அணியை வென்றது இலங்கை!

முதலாவது ஒருநாள் போட்டி; மேற்கிந்தியத்தீவுகள் அணியை வென்றது இலங்கை!


சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஹோப்பின் சதத்தின் மூலம் வலுவான இலக்கை நிர்ணயித்தது.

ஆரம்பத்துடுப்பாட வீரர் அம்ரிஸ் 3 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில் பிராவோவுடன் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார் ஹோப். அணியின் ஓட்ட எண்ணிக்கை 87 ஆக உயர்ந்த போது பிராவோ 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹாசும் ஹோப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். இருவரும் இணைந்து 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் 41 ஓட்டங்களுடன் ஹாசும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் சதமடித்து சவாலான இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்திருந்தார். 140 பந்துகளை சந்தித்து பத்து 4 ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார் ஹோப். 50 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பந்துவீச்சில் இலங்கை அணிசார்பில் இசுரு உதான 3 விக்கெட்டுக்களையும் திசார பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகிய இருவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு 290 என்ற வெற்றில் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ(50) மற்றும் திமுத் கருணாரத்னே(52) ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்து ஆட்டமிழந்திருந்தனர். குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் டீ சில்வா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து மென்டிஸ் 20 ஓட்டங்களையும் மத்தியூஸ் 5 ஓட்டங்களையும், டிம் டி சில்வா 18 ஓட்டங்களையும், திரார பெரேரா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE