Friday 26th of April 2024 10:13:37 PM GMT

LANGUAGE - TAMIL
ரீ-20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிகா!

ரீ-20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிகா!


சுற்றுலா அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரை சமன் செய்துள்ளது தென்னாபிரிக்க அணி.

இரண்டாவது ரீ-20 போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா.

முதலாவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ரீ-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குயின்டன் டீ கொக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

அதனடிப்படையில் 6.3 ஓவர்களில் 60 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக பெற்றிருந்தபோது ஹென்ரிக்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குயின்டன் டீ கொக் 47 பந்துகளை சந்தித்து ஐந்து 4 ஓட்டங்கள், நான்கு 6 ஓட்டங்களை விளாசி 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

டௌசனும் தன் பங்கிற்கு 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

159 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி இறுதிவரை போராடி தோல்வியடைந்துள்ளது. வலுவான துடுப்பாட்ட வரிசை கொண்ட அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குறிப்பிட்ட ஓட்ட இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது.

அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்று இறுதிவரை களத்தில் இருந்த போதிலும் தென்னாபிரிக்க பந்துவீச்சை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியாது போயிருந்தது. ஸ்ரீவன் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 29 ஓட்டங்களை பெற்று ஆட்மிழந்திருந்தார்.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக குயின்டன் டீ கொக் தேர்வு செய்யப்பட்டார்.

முன்று போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் வரும் 26 ஆம் திகதி கேப்ரவுனில் நடைபெறும் மூன்றாவது போட்டி பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE