Friday 26th of April 2024 06:02:53 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -29.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -29.02.2020


மேஷம்

மேஷம்: மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல்ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழையகடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களு டன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்

கடகம்: கடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங் களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

கன்னி: கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத் தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: துலாம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.கல்யாணப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள்உதவியை நாடுவார்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: கும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு இளமை கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE