Friday 26th of April 2024 10:12:59 PM GMT

LANGUAGE - TAMIL
http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/1585529093_astrology30.jpg
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -30.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -30.03.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 17ம் திகதி, ஷாபான் 4ம் திகதி, 30.3.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 11:34 வரை, அதன் பின் சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் பகல் 2:10 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம் • பொது சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, முகூர்த்த நாள்

--

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உணர்ச்சி வேகத்தில் அவசரமுடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் முதலீடுசெய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். திறமை வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புவரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தை பெரிய பொறுப்புகள் தேடி வரும்.எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.. அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE