Friday 26th of April 2024 07:39:56 PM GMT

LANGUAGE - TAMIL
கிளைன் மெக்ராத்
லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் - மெக்ராத்!

லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் - மெக்ராத்!


தனது வாழ்நாளில் சந்தித்த வீரர்களில் பிரைன் லாராவுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் இணையத்தளம் ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி : உங்களது வாழ்க்கையில் விடுபட்ட, செய்ய விரும்பிய ஏதாவது ஒரு பந்து வீச்சு?

பதில் : மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீச வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு.

கேள்வி : சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), பிரைன் லாரா (மே.இந்திய தீவுகள்) ஆகிய இரு ஜாம்பவான்களில் யாருக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது?

பதில் : சவாலான கேள்வி. இருப்பினும் எனது அனுபவத்தில் லாராவுக்கு பந்து வீசுவது கொஞ்சம் கடினம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

கேள்வி : இது உலக கோப்பை இறுதி ஆட்டம். நீங்கள் தான் கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டிய நெருக்கடி. எதிரணியின் வெற்றிக்கு 2 ரன் தேவை. இந்த மாதிரியான சூழலில் மன்கட் முறையில் ரன் அவுட் செய்வீர்களா?

பதில் : ஒருபோதும் செய்யமாட்டேன்.

கேள்வி : சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய பந்துவீச்சாளர்களில் முழுமையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் யார்?

பதில் : அவுஸ்ரேலியாவின் பேட் கம்மின்ஸ். அவர் பந்துவீசும் விதம் எனக்கு பிடிக்கும்.

கேள்வி : உங்களது கனவு ஹட்ரிக் விக்கெட்டில் எந்த துடுப்பாட்ட வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?

பதில் : பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட்.

கேளிவி : 1990 களில் 20 ஓவர் கிரிக்கெட் போன்று அதிரடியாக ஆடிய வீரர் யார்?

பதில் : மார்க் வோவ்

கேள்வி : உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு போட்யின் முடிவை மாற்ற வேண்டும் என்று இருந்தால் உங்களது தேர்வு எந்த ஆட்டமாக இருக்கும்?

பதில் : 1994 ம் ஆண்டு சிட்னியில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்டை (கடைசி விக்கெட்டாக மெக்ராத் ஆட்டமிழந்த இந்த டெஸ்டில் 5 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது) சொல்வேன். அந்த போட்டியின் முடிவை மாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி : ஒரு விளையாட்டு வீரராக கிரிக்கெட்டை தவிர்த்து வேறு விளையாட்டுகளில் யாரை சந்தித்து பேச ஆசைப்படுகிறீர்கள்?

பதில் : உசைன் போல்ட் (தடகளம்), ரோஜர் பெடரர் (டென்னிஸ்), ஸ்டீவ் ரெட்கிராவ் (துடுப்பு படகு வீரர்)

கேள்வி : உங்களது கிரிக்கெட் பயணம் சினிமாவாக எடுக்கப்பட்டால், உங்களது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?

பதில் : பிராட் பிட் (ஹோலிவுட் நடிகர்), ஹக் ஜாக்மன் (அவுஸ்ரேலிய நடிகர்), ஜிம் கேரி (கனடா நகைச்சுவை நடிகர்) ஆகியோரில் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என மெக்ராத் பதிலளித்திருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE