Friday 26th of April 2024 03:35:22 PM GMT

LANGUAGE - TAMIL
இரசாயன ஆலையில் வாயுக் கசிவு
வீதியெங்கும் சடலங்கள்: விசாகப்பட்டினத்தில் துயரம்!

வீதியெங்கும் சடலங்கள்: விசாகப்பட்டினத்தில் துயரம்!


இந்தியா விசாகப்பட்டினத்தில் உள்ள இரசாயன ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து உயிரிழந்தவர்களது சடலங்கள் வீதியெங்கும் காணப்படுகிறது. அத்டதுடன் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரசாயன ஆலையில் இருந்து ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி, வீதியில் பயணித்தவர்கள் அப்படியே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் அப்படியே விழுந்து உயிரை விட்டுள்ளார்கள். இவ்வாறு உயிரிழந்தவர்களது சடங்கள் வீதிகளிலும் வாய்கால்களிலும் காணப்படுகிறது.

இதனால் உயிரழந்தவர்களது எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுதவிர நூற்றுக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. ஆங்காங்கே உயிரிழந்த மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் சடலங்கள் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதி பெரும் அவலமாக காட்சியளிக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் இருந்து இன்று (மே-7) காலையில் இரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் இவ் அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, ஆந்திர பிரதேசம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE