Friday 26th of April 2024 11:47:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியப் படையினா் எல்லை தாண்டடியதாலேயே  மோதல் ஏற்பட்டது; சீனா விளக்கம்!

இந்தியப் படையினா் எல்லை தாண்டடியதாலேயே மோதல் ஏற்பட்டது; சீனா விளக்கம்!


இந்தியப் படையினா் எல்லை தாண்டி சீன பிராந்தியத்துக்குள் அத்துமீறி நுழைந்தது ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன், தன்னிச்சையாக அந்த பகுதியின் கட்டுப்பாட்டு நிலையை மாற்றி அதை நிர்வகிக்க முற்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடா்பாளா் ட்செள லிஜியானிட தெரிவித்துள்ளார்.

இதனால் களத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கை எடுத்து எல்லை பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கட்டாயத்துக்கு சீன படையினர் தள்ளப்பட்டதாகவும் அவா் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா இடையே எல்லை தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அறிக்கையை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியானிடம் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவா் இந்தியப் படையினரின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளாலேயே நிலைமை சிக்கலானதாகக் கூறினார்.

கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்திய படையினர் ஒருதலைபட்சமாகவும் தொடர்ச்சியாகவும் அந்த பகுதியில் வீதிகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கட்டி வந்ததனர். அது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சீனா தனது ஆட்சேபங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் தொடா்ந்தும் இந்திய படையினர் எல்லைக் கட்டுபாட்டு பகுதியைத் தாண்டி முன்னேறி வந்ததுடன் பல ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டார்கள்.

கடந்த மே- 6 ஆம் திகதி அதிகாலை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைக் கடந்து வந்திருந்த இந்திய படையினர், சீன பிராந்தியத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், தடுப்புகளையும் மணல் அரண்களையும் கட்டியபோது அதை சீன ரோந்துப் படையினர் தடுத்தார்கள்.

அப்போது வேண்டுமேன்றே ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்திய படையினர், தன்னிச்சையாக அந்த பகுதியின் கட்டுப்பாட்டு நிலையை மாற்றி, அதை நிர்வகிக்க முற்பட்டார்கள். இதனால், களத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கை எடுத்து எல்லை பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கட்டாயத்துக்கு சீன படையினர் தள்ளப்பட்டார்கள் எனவும் சீன வெளியுறவு அமைச்சா் செய்தியாளா்களிடம கூறினாா்.

இந்த நிலைமையை தணிப்பதற்காக, சீனாவும், இந்தியாவும் இராணுவ அளவிலும் இராஜதந்திர வழிகளிலும் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டு பேசின.

சீன தரப்பின் வலுவான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை கடந்து வந்த தமது படையினரை திரும்ப அழைத்துக் கொண்டு, அங்கு நிறுவப்பட்ட வசதிகளை அழிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அதன்படியே அவர்கள் செய்தார்கள்.

கல்வான் நதியின் முகப்புப் பகுதியைக் கடந்து வந்து ரோந்துப் பணியிலோ வேறு அமைப்புகளையோ நிறுவ மாட்டோம். களத்தில் உள்ள கட்டளை அதிகாரிகள் இடையே கூட்டங்கள் நடத்தி, பகுதி- பகுதியாக படையினரை அங்கிருந்து விலக்குவது பற்றி விவாதிப்போம் என இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அதிர்ச்சி தரும் வகையில், கடந்த 15-ஆம் திகதி மாலையில், இந்தியாவின் எல்லை முன்னரங்கில் இருந்த படையினர், கட்டளை அதிகாரிகள் கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டை மீறி மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வந்தார்கள்.

அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த சீன அதிகாரிகள் மற்றும் வீரர்களை கடுமையாக தாக்கினார்கள். அது பின்னரே இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு உருவாகி பெரும் மோதலாக மாறியது எனவும் சீன வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடா்பாளா் ட்செள லிஜியானிட தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் சாகச செயல்பாடுகள் எல்லை பகுதிகளின் ஸ்திரத்தன்மையை மட்டுப்படுத்தியது மட்டுமின்றி, சீன படையினரின் உயிருக்கும் அச்சுறுத்தலாகியது. மேலும், இரு நாடுகள் இடையே எல்லை பிரச்சனையில் எட்டப்பட்ட உடன்பாடுகளையும் சர்வதேச உறவுகளை பேணும் அடிப்படை நியதிகளை மீறுவதாகவும் அமைந்தது.

இது தொடர்பாக தமது கடுமையான ஆட்சேபத்தையும் உரிய புகாரையும் இந்தியாவிடம் சீனா பதிவு செய்ததது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் பேசினார்.

அப்போது சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் விவரித்து, நடந்த சம்பவம் குறித்து இந்தியா முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், எல்லை முன்னரங்கில் உள்ள இந்திய படையினர் கண்டிப்பான ஒழுக்கத்துடன் செயலாற்றி அத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த எல்லாவித ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அமைச்சரிடம் சீன அமைச்சர் கேட்டுக் கொண்டார் எனவும் சீன வெளிவிவகார அமைச்சா் கூறினாா்.

எனினும் இந்த மோதலில் சீன இராணுவத் தரப்பில் ஏற்பட்ட சேதத்தையோ, உயிரிழப்புகள் குறித்தோ அவர் எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE