Friday 26th of April 2024 08:19:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
“ஒரே சீனா” கொள்கையின் கீழ்  தாய்வானை  ஆக்கிமிக்கத் துடிக்கும் சீனாவின் புதிய முயற்சி!

“ஒரே சீனா” கொள்கையின் கீழ் தாய்வானை ஆக்கிமிக்கத் துடிக்கும் சீனாவின் புதிய முயற்சி!


“ஒரே சீனா” கொள்கையின் கீழ் தாய்வானுக்கு உரிமை கோருவதை ஆதரிக்கும் ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் ஹொங்கொங்கில் உள்ள தாய்வான் அதிகாரிகளின் விசாக்கள் நீடிக்கப்படாது என ஹொங்கொங்கில் உள்ள பீஜிங் சார்பு அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக அங்குள்ள தாய்வான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹொங்கொங் தொடா்பான புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பீஜிங் அண்மையில் நிறைவேற்றியது. இதனை தாய்வான் கடுமையாக விமர்சித்து வருகிறது.

சீனாவின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறும் ஹொங்கொங் செயற்பாட்டாளா்களுக்கு தாய்வான் புகலிடம் அளித்து வருகிறது. இதற்கான விசேட அலுவலகத்தையும் தாய்வான் திறந்துள்ளது.

இந்நிலையில் ஹொங்கொங்கில் உள்ள தாய்வான் அதிகாரிகள் தங்கள் விசாக்களைப் புதுப்பிக்கச் செல்லும்போது “ஒரே சீனா” கொள்கையின் கீழ் தாய்வானுக்கு உரிமை கோரும் சீனாவின் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பீஜிங் அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனை தாய்வானின் மூத்த அரச அதிகாரி ஒருவா் ரொய்ட்டர்ஸிடம் உறுதி செய்துள்ளார்.

"நாங்கள் ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் அவர்கள் விசா வழங்க மாட்டார்கள்," என்று அந்த அதிகாரி கூறினார். எனினும் அவா் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

"நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ஹொங்கொங்கில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடிப்பார்கள். ” எனவும் அவா் தெரிவித்தார்.

தாய்வானை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுவதாக சீன அரசு தொடா்ந்து கூறி வருகிறது. தாய்வானை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் சீனா தொடா்ந்தும் ஈடுபட்டுள்ளது.

ஹொங்கொங் போன்று ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்ளையின் கீழ் தாய்வானை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர சீனா முயன்று வருகிறது.

ஆனால் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் சீனாவின் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளார். சீனாவின் இந்த முயற்சி பலிக்காது என அவா் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனா அமுல்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தால் துன்புறுத்தப்படலாமென்ற அச்சம் காரணமாக ஹொங்கொங்கைச் சேர்ந்த மக்கள் தாய்வானுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

புதிய அலுவலகம், திறமையாக மதிப்பீடு செய்து ஒவ்வொருவரின் விண்ணப்பத்தையும் பரிசீலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வருகை அதிகரித்தாலும் அதனை கையாள போதிய வளங்கள் இருக்கிறது என தாய்வான் ஜனாதிபதி அலுவகத்தின் செய்தி தொடர்பாளர் கோலாஸ் யோட்டகா தெரிவித்தார்.

2019ம் ஆண்டு ஹொங்கொங்கில் நடந்த போராட்டத்தின் போது, சுமார் 6 ஆயிரம் பேர் தாய்வானுக்கு குடிபெயர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE