Friday 26th of April 2024 03:25:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
மரணத்தை நேரலை செய்யும் பிரெஞ்சு நோயாளி!

மரணத்தை நேரலை செய்யும் பிரெஞ்சு நோயாளி!


அரிய, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பிரஜை ஒருவர் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை எடுத்தக்கொள்ள மறுத்து இறக்க முடிவு செய்துள்ளார். தனது வாழ்நாளின் இறுதித் தருணங்களை அவர் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு வருகிறார்.

தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

34 ஆண்டுகளாக தீராத நோயால் அவதியுற்றுவரும் 57 வயதான அலைன் கோக், சனிக்கிழமை காலை முதல் பேஸ்புக்கில் தனது இறுதித் தருணங்களை நேரலையாக ஒளிபரப்பு வருகிறார். மரணமடையும் இறுதி நொடி வரை இவ்வாறு நேரலை செய்யவுள்ளதாக அவா் அறிவித்துள்ளார்.

நான் எனது கடைசி உணவை முடித்துவிட்டேன். உலக வாழ்வில் இருந்து நான் விடுதலை விடுதலை பெறும் காலம் நெருங்குகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கோக் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் கூறினார்.

தன்னைக் கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்குமாறு கோரி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு அலைன் கோக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

பிரான்சின் அண்டை நாடுகளான சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை சில சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவியுடன் ஒருவர் சுயவிருப்பில் இறக்க அனுமதிக்கும் சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் அழுத்தத்தால் பிரான்ஸ் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் கருணைக் கொலையை பிரான்ஸ் அங்கீகரிக்க வேண்டும் என அலைன் கோக் வலியுறுத்தி வருகிறார்.

தனது இறுதித் தருணங்களை அலைன் கோக் நேரலை செய்துவரும் நிலையில் அவரது கணக்கை முடக்கி இந்த முயற்சியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE