Thursday 25th of April 2024 08:25:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2020: ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது சென்னை!

ஐபிஎல்-2020: ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது சென்னை!


தீர்மானகரமிக்க நேற்றைய போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 20 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி தலைவர் எம்எஸ் டோனி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

டு பிளசிஸ் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடு வாட்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

14வது ஓவரில் சென்னை அணி 100 ஓட்டங்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வாட்சனும் 42 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்ததாக எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 10 பந்தை சந்தித்த ஜடேஜா 25 ஓட்ஙடகளையும், 2 பந்தை சந்தித்த சாஹர் 2 ஓட்டங்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 13 பந்துகளை சந்தித்த வார்னர் 9 ஓட்டங்களை எடுத்து சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த மணீஷ் பாண்டே 4 ஓட்ஙட்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் தொடக்க வீரர் பிரிஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

24 பந்துகளை சந்தித்த பிரிஸ்டோவ் 23 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிரியம் கர்ருடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பிரியம் கர் 16 ஓட்டங்களைப் பெற்றும், அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார். ஒற்றை வீரராக போராடிய வில்லியம்சன் 39 பந்தில் 7 பவுண்டரிகள் உள்பட 57 ஓட்டங்கள் குவித்து கரன் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியின் கரன் சர்மாஇ பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE