Tuesday 7th of May 2024 09:16:34 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை!


ஐபிஎல் ரீ-20 கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்டனர் படைத்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.

164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.

தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்னர் ஐந்து 4 ஓட்டங்களுடன் 47 (33) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் டேவிட் வோர்னர் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வோர்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.

இதேபோல், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வோர்னர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE