Wednesday 8th of May 2024 11:57:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
மற்றொரு உலகப் போருக்கான அபாயம் குறித்து  எச்சரிக்கும் பிரிட்டனின் ஆயுதப் படைகளின் தலைவர்!

மற்றொரு உலகப் போருக்கான அபாயம் குறித்து எச்சரிக்கும் பிரிட்டனின் ஆயுதப் படைகளின் தலைவர்!


கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதட்டம் மற்றொரு உலகப் போருக்கு வித்திடக்கூடும் என பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைவர் நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார்.

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பிரிட்டனில் வருடம் தோரும் நவம்பர் 8 ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றனர்.

இந்த நினைவு நாளை ஒட்டி ஊடகம் ஓன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மற்றொரு உலகப் போருக்கான சாத்தியம் குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.

பிராந்திய பதட்டங்கள் அதிகரிப்பது மற்றும் தவறான முடிவுகள் இறுதியில் பரவலான மோதலுக்கு வழிவகுக்கும் என்று நிக் கார்ட்டர் கூறினார் .

உலகம் மிகவும் நிச்சயமற்ற ஒரு தருணத்தில் உள்ளது. மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் நிலவும் பிராந்திய மோதல்கள் தவறான கணிப்பீடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு உலகப் போருக்கான உண்மையான அச்சுறுத்தல் இருக்கிறதா? எனக் கேட்டபோது, அதற்கான ஆபத்து உள்ளது. இது குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் நிக் கார்ட்டர் கூறினார்.

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய நினைப்பவா்கள் முந்தைய போர்களில் ஏற்பட்ட இழப்புக்களைநினைவில் கொள்வது முக்கியம் எனவும் கார்ட்டர் தெரிவித்தாா்.

கார்ட்டர் 2018-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆயுதப்படை தலைவராக இருந்துவருகின்றமை குறிப்பிடத்கதக்து.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE