Friday 26th of April 2024 07:58:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிய நாமல்

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிய நாமல்


லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டாலியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அந்த அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, அணித்தலைவர் திஸர பெரேராவிடம் வழங்கிவைத்தார்.

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஜப்னா அணி சார்பாக சொயிப் மலிக் 46 ஓட்டங்களையும், அணித்தலைவர் திஸர பெரேரா 14 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும், தனஞ்சடி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர். லக்‌ஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 189 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்படி 53 ஓட்டங்களால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

அணி சார்பாக, அணித் தலைவர் பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும், அஸாம் கான் 36 ஓட்டங்களையும் பெற்றனர். முதல் 3 விக்கெட்டுகளும் 7 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது. சிறப்பான ஆரம்பம் இன்மையாலேயே தோல்வியை நோக்கி நகரவேண்டிய நிலை காலி அணிக்கு ஏற்பட்டது.

உஷ்மான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசராங்கவும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE