Saturday 18th of May 2024 03:20:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழகத் தேர்தல் முடிவுகள்: இதுவரையில் முன்னிலையில் திமுக கூட்டணி! (3ஆம் இணைப்பு)

தமிழகத் தேர்தல் முடிவுகள்: இதுவரையில் முன்னிலையில் திமுக கூட்டணி! (3ஆம் இணைப்பு)


மூன்றாம் இணைப்பு

தொடர்ந்தும் எண்ணப்பட்டுவரும் தமிழகத் தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் இதுவரையில் 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 110 இடங்களிலும் காங்கிரஸ் 8, மதிமுக - 4 , சிபிஎம் - 3, சிபிஐ-2, விசிக - 4, ஏனையவை 1 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதிமுக கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 84 இடங்களிலும் பாமக -11, பாஜக- 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

இரண்டாம் இணைப்பு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது வரையில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில் திமுக கூட்டணி 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அவற்றில் திமுக - 106, காங்கிரஸ் - 07, மதிமுக - 02, சிபிஐ - 2, விசிக - 4, ஏனையவை ஒன்று என முன்னிலை வகிக்கின்றன.

அதிமுக 74 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக 61 இடங்களிலும் பாமக 10, பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன. மக்கள் நீதிமய்யம் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இருந்தபோதிலும் தற்போது வரையில் எண்ணப்பெற்றுள்ள வாக்குகள் அரச ஊழியர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுடையவை (தபால் மூல வாக்குகள்) என்றும் மக்களின் வாக்குகள் எண்ணும் பணிகள் இனிமேல் தான் எண்ணப்படும் என்று தமிழகத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அருவிக்குத் தெரிவித்தார்.

முன்னைய பதிவு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய எதிர்க்கட்சியாகிய திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 71 இடங்களிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதிமுக கூட்டணி 65 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 63 இடங்களிலும் பாமக, பாஜக தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறன. அமமுக 2 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE