Thursday 25th of April 2024 08:00:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் விண்கலம்!

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் விண்கலம்!


செவ்வாய்க்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் செவ்வாயின் வெற்றிகரமாக தரை இறங்கியதாக சீனா அறிவித்துள்ளது.

உலக நாடுகள் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் சீனாவும் இணைந்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆய்வுக்காக தியான்வென்-1 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் திகதி சீனாஅனுப்பியது. ஹெனன் தீவில் இருந்து இது விண்ணில் ஏவப்பட்டது.

6 சக்கரங்களைக் கொண்ட ரோவருடனான இந்த விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தியான்வென்-1 விண்கலம் செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும். இந்த தியான்வென்-1 மொத்தம் 240 கிலோ எடையுள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த தியான்வென்1- விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள் செவ்வாய் கிரகத்தின் பாறையின் தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வை மேற்கொள்ளவுள்ளன.

இதேவேளை, தியான்வென்1- விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE