Friday 26th of April 2024 06:51:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
மனைவியோடு சேர்ந்து தனது பெற்றோரை பட்டினி போட்டுக் கொன்ற கொடூரம்: மகனும் மருமகளும் கைது!

மனைவியோடு சேர்ந்து தனது பெற்றோரை பட்டினி போட்டுக் கொன்ற கொடூரம்: மகனும் மருமகளும் கைது!


வயதான பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவா்களின் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் இந்தியாவின் தெலங்கான மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மகனையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரித்தபோது அவா்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெலங்கான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெற்றோரின் மகனும் அவரது மனைவியும் இணைந்து பெற்றோரை வீட்டில் ஒரு ஒதக்குப்புறத்தில் தங்கவைத்து அவர்களுக்கு உணவேதும் வழங்காமல் பட்டினி போட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும கொரோனாவால் இறந்ததாக பொய்யான தகவலை வெளியிட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்த முதியவர்களான 90 வயதான ராமச்சந்திர ரெட்டி மற்றும் 80 வயதான அனுசூயம்மாவுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

ராமச்சந்திர ரெட்டிக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பெருமளவு சொத்துக்கள் இருந்தன. வயதாகிவிட்டதால் தனது சொத்தக்களை அவா் தனது இரண்டு மகன்களுக்கு சமமாக பிரித்துக்கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரை ஒவ்வொரு மாதமும் இரு மகன்களும் மாறி மாறிக் கவனிக்க ஒப்புக்கொண்டனர். இளைய மகன் இறந்ததால், மருமகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பெற்றோரை கவனிக்கும் முறை தங்களுக்கு வந்ததும் மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டி மற்றும் அவரது மனைவி லட்சுமியோடு சோ்ந்து தனது பெற்றோரை வீ்ட்டுக்கு வெளியே ஒரு சிறிய கொட்டிலில் தங்கவைத்து கொடுமைப்படுத்தினார். அவர்களுக்கு உணவு வழங்காது பட்டினி போட்டுள்ளனர். இதனால் பசிக் கொடூமையால் இருவரும இறந்துள்ளனர்.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து மகளையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரித்ததில் முதியவர்களின் மரணத்திற்கு தாங்கள்தான் காரணம் என்று அவா்கள் ஒப்புக்கொண்டதாக தெலங்கான பொலிஸார் கூறினர்.

பெற்றோர் இறந்ததும் அவரது மகனும் மருமகளும் இணைந்து அவர்கள் கொரோனா காரணமாகவே இறந்துவிட்டதாகவும் இருவரையும் அடக்கம் செய்துவிட்டதாகவும் ஊரவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தேகமடைந்த ஊரவர்கள் இந்தச் சம்பவம் குறித்து கடந்த மாதம் 27 ஆம் திகதி பொலிஸில் முறையிட்டதைத் தொடர்ந்தே பெற்றோரை தனது மனைவியுடன் இணைந்து மகன் பட்டினி போட்டக் கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடியமை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பெற்றோரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE