Friday 26th of April 2024 11:22:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
2-வது ரீ-20; 7 விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை வீழ்த்தி அயர்லாந்து பதிலடி!

2-வது ரீ-20; 7 விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை வீழ்த்தி அயர்லாந்து பதிலடி!


சுற்றுலா சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ரீ-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அயர்லாந்து பதிலடி கொடுத்துள்ளது.

அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள சிம்பாப்வே அணி அயர்லாந்து அணியுடன் 5 ரீ-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டித் தொடரிலும் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரீ-20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி பெற்றிருந்த நிலையில் 2வது ரீ-20 போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்திருந்தது.

சிம்பாப்வே அணி சார்பில் ஷம்பா-46, பர்ல்-37 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழக்காது இருந்தனர்.

இதையடுத்து 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி அச்சுறுத்தல் ஏதுமின்றி வெற்றி அலக்கை அடைந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய போல் ஸ்ட்ரிங்க (37) மற்றும் கெவின் ஓ பிரையன் (60) சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அடுத்து வந்த ஜோர்ச் தனது பங்கிற்கு ஆட்டமிழக்காது 33 ஓட்டங்கள் எடுக்க 18.3 ஓவர்களில் 3விக்கெட்டை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அயர்லாந்து.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 : 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE