Friday 26th of April 2024 02:48:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம்; அதிர்ந்த கட்டடம்; அசராத பிரதமர் ஜெசிந்தா!

நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம்; அதிர்ந்த கட்டடம்; அசராத பிரதமர் ஜெசிந்தா!


நியூசிலாந்தில் அந்நாட்டு நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 10.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக இந்த நில அதிர்வு பதிவானது.

அந்நாட்டின் வடக்கு தீவுகளில் ஒன்றான தமருனி மாகாணம் கிங் கண்ட்ரி நகரில் 210 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

இதேவேளை, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொரோனா நிலைவரம் குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்தபோது அவா் சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த கட்டடம் நில நடுக்கத்தால் அதிர்ந்தது. எனினும் அதிர்ச்சியடையாத அவர் அமைதியாக சமாளித்தார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தபோது கட்டடம் திடீரெனக் குலுங்கியதால் சுற்றுமுற்றும் பார்த்த அவா், மன்னிக்கவும், ஒரு சிறிய கவனச்சிதறல் எனக் கூறி, அந்தப் பத்திரிகையாளரின் கேள்வியை மீண்டுமொருமுறை கேட்டுமாறு கூறி அதற்குப் பதலளித்தார்.

இதேவேளை, இந்த நில நடுக்கத்தால் பாரிய பாதிப்புக்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE