Friday 26th of April 2024 02:42:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
T 20 - உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஆஸி!

T 20 - உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஆஸி!


ரி - 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி18.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத் தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கூடுதலாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

ஆஸி. அணி சார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் 77 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் 18 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE