Friday 10th of May 2024 10:40:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
உக்ரைனின் கிழக்கில்  டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்யா!

உக்ரைனின் கிழக்கில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்யா!


உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு கிளாச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். இதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

அத்துடன், சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைன் கிழக்கு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் அமைதியை உறுதி செய்யுமாறும் அவா் ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தப் பகுதிகளுக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன. உக்ரைக் கிழக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குகளுக்குள் ரஷ்ய துருப்புக்கள் அதிகாரபூர்வமாக நுழைவது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த முடிவால் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைன் இடையிலான சமாதான உடன்படிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.

இதேவேளை,டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டதன் மூலம் உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா நுழைவதற்கு வழி ஏற்படும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் பாராளுமன்றம் பிரிவினைவாத பிராந்தியங்கள் உடனான ஒப்பந்தங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இராணுவ தளங்களை கட்டுவதற்கான உரிமையை ரஷ்யாவுக்கு வழங்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து தனது குடிமக்களை பாதுகாப்பது என்ற போர்வையில் உக்ரைனுக்குள் ரஷ்யா தனது இராணுவத்தை நகர்த்தக்கூடும் என உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை இரவு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த உடனேயே தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி புடின், நவீன உக்ரைன் சோவியத் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்று கூறினார். உக்ரைன் பண்டைய சோவியத் ரஷ்யாவின் நிலம் என்றும் அவா் குறிப்பிட்டார்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது ரஷ்யா கொள்ளை அடிக்கப்பட்டது என்று தனது ஒரு மணி நேர உரையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டார்.

உக்ரைன் ஒரு பொம்மை அரசாங்கத்தால் நடத்தப்படும் அமெரிக்க கொலனித்துவ நாடு என்று அவா் குற்றஞ்சாட்டினார். 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் ரஷ்ய சார்பு தலைவரை கவிழ்த்த புரட்சியை ஒரு சதி என்று விளாடிமிர் புடின் வர்ணித்தார்.

இதேவேளை, உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டமையை அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE