Saturday 4th of May 2024 08:56:23 PM GMT

LANGUAGE - TAMIL
பிகில் படத்தில் டிரெய்லர் இன்று வெளியானது!(காணொளி)

பிகில் படத்தில் டிரெய்லர் இன்று வெளியானது!(காணொளி)


நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் 3வது படமாக மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் பிகில். இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி செம வைரலாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூபில் 4.94 பார்வைகளை கடந்துள்ளது.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகவிருக்கிறது.

பிகில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை தினம் தினம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் இந்த படத்தில் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் டிரெய்லர் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 12ம் தேதி (இன்று) மாலை டிரெய்லர் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட்டது. தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே 4.94 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE