Friday 26th of April 2024 08:57:49 PM GMT

LANGUAGE - TAMIL
அனுமதியின்றி வழங்கப்படுகின்ற நிவாரணங்ககளுக்குத் தடை!

அனுமதியின்றி வழங்கப்படுகின்ற நிவாரணங்ககளுக்குத் தடை!


முல்லைத்தீவு மாவட்டத்தில், மாவட்ட மற்றும் பிரதேசசெயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் எவரினதும் அனுமதி பெறப்படாது பலரும் நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதாக அறிய முடிகின்றது.

அவ்வாறு அனுமதி பெறப்படாது நிவாரணங்கள் வழங்கப்படுமாயின் பொலீசாரின் மூலம் குறித்த நிவாரணங்களை தடைசெய்யவுள்ளதாகவும் முல்லைத்தீவுமாவட்ட செயலர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவட்டசெயலர், பிரதேசசெயலர் மற்றும், கிராமஅலுவலர்களின் அனுமதியின்றி ஒரு சில நிறுவனங்கள் தனிப்பட்ட ரீதியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இது முற்று முழுதாகத் தடைசெய்யப்படவேண்டும்.

எந்தவொரு நிவாரணம் வழங்கப்படும்போதும் மாவட்டசெயலரின்அனுமதி பெற்று, உரிய பிரதேசசெயலர் மற்றும் கிராம சேவகர்களூடாக நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும்.

அதிலும் குறிப்பாக தகுந்த நபர்களுக்கு உரிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்படாமல் நிவாரணங்கள் வழங்கப்படின் அவ்வாறான நிவாரணங்கள் வழங்குவதை தடைசெய்யவும் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE