Friday 26th of April 2024 06:20:57 PM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் உயிரிழப்பு
பிரான்ஸில் நேற்று 499 போ் உயிரிழப்பு;  52,128 போ் கொரோனா தொற்றால் பாதிப்பு!

பிரான்ஸில் நேற்று 499 போ் உயிரிழப்பு; 52,128 போ் கொரோனா தொற்றால் பாதிப்பு!


பிரான்ஸில் கொரோனா தொற்றுக்குள்ளான 499 போ் நேற்று உயிரிழந்ததாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய இறப்புக்களுடன் பிரான்ஸில் மரணமடைந்தவா்கள் எண்ணிக்கை 3,523 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக பிரான்சில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரான்ஸ் மூன்று வாரங்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளபோதும் அங்கு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

தினசரி நிலவர அறிக்கையில் வைத்தியசாலைகளில் இறப்போரின் எண்ணிக்கைகளே உத்தியோகபூா்வமாக சுகாதார அதிகாரிகளால் உறுதிப்படுகின்றன.

ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் இறப்பு குறித்த தரவுகள் வழங்கப்படுவதில்லை. இவையும் கணக்கிடப்பட்டால் உயிரழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, பிரான்ஸில் இதுவரை தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,128 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார நிறுவன பணிப்பாளர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

உயிர் காப்புக் கருவிகளின் உதவியுடன் 5,565 போ் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் உள்ளதாகவும் அவா் கூறினார்.

கொரோனா தொற்று நெருக்கடி அதிகரித்த பின்னா் நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை 10 ஆயிரம் வரை பிரான்ஸ் அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 14,500 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் உள்ளதாக பிரான்ஸ் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE