Friday 26th of April 2024 06:11:21 PM GMT

LANGUAGE - TAMIL
மாகாண சுகாதார நிபுணா்கள் கருத்து!
கொரோனா: ஒன்றாரியோவில்  15,000 போ் வரை உயிரிழக்கலாம் என எச்சரிக்கை!

கொரோனா: ஒன்றாரியோவில் 15,000 போ் வரை உயிரிழக்கலாம் என எச்சரிக்கை!


கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவாயிரம் முதல் 15 ஆயிரம் வரையான மக்கள் உயிரிழக்கக் கூடும் என மாகாண சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளா்.

கொரோனா தொற்று பாதிப்பு 18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை நீடிக்கலாம் எனவும் அவா்கள் கூறியுள்ளனா்.

ஒன்ராறியோவில் கொரோனா தொற்று பரவல் குறித்த மாகாணம் தயாரித்துள்ள திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவா்கள் இந்தக் கணிப்பீடுகளை வெளியிட்டுள்ளனா்.

ஒன்ராறியோ ஹெல்த் நிறுவனத்தின் தலைவர் மத்தேயு ஆண்டர்சன், ரொராண்டோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறை பீடாதிபதி அடால்ஸ்டீன் பிரவுன் மற்றும் ஒன்ராறியோ பொது சுகாதாரத் தறை தலைவரான டாக்டர் பீட்டர் டொன்னெல்லி ஆகியோர் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டில் இதனை விளக்கினா்.

"நாங்கள் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுததிருக்காவிட்டால் ஒன்ராறியோ 100,000 இறப்புகளை சந்தித்திருக்கலாம்" என ஒன்ராறியோ பொது சுகாதாரத்துறை தலைவரான டாக்டர் பீட்டர் டொன்னெல்லி கூறினார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவ்வாறான மிக மோசமான நிலைக்கும் செல்லவில்லை.

இந்த புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்தக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக இதனை நாங்கள் தெரிவிக்கவேண்டியுள்ளது என டொனெல்லி கூறினார்.

ஒன்ராறியோவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,350 பேர் சாதாரண மற்றும் பருவகால காய்ச்சலால் இறக்கின்றனர் என்று அவர் கூறினார். ஒரு மோசமான ஆண்டில், 1,500 பேர் வரை கூட இறக்கின்றனர்.

இந்நிலையில் இதனுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் இறப்பு பத்து மடங்கு அதிகமாகும். ஏனெனில் இதற்கான தடுப்பு மருந்து இதுவரை இல்லை. குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான நிலையிலேயே 15,000 இறப்புக்கள் என்ற எண்ணிக்கை முற்றிலும் தர்க்கரீதியானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

மக்கள் வீட்டிலேயே தங்கி உடல் சமூகத் தொலைவைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாகாணத்தில் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். எல்லோரும் இது குறித்து பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் எனவும் டாக்டர் பீட்டர் டொன்னெல்லி கூறினார்.

18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலைகளையும் உள்ளடக்கியதாக மாறலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.

ஆனால் 18 முதல் இரண்டு ஆண்டுகள் வரையான காலகட்டத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அவா் கூறவில்லை.

சமூக தொலைவு நடவடிக்கைகள் தொடா்பில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் சற்று விலகியிருக்கிறோம். குறிப்பாக கிறேட் ரொரண்டோ போன்ற சனத்தொகை அடா்த்தி மிக்க பிரதேசங்களிலும் இதுவே நடக்கிறது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

ஒன்ராறியோவில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த வீதம் 16 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது என்று மாகாணத்தின் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இது உலகளவில் பதிவான இறப்பு வீதத்தை விட சற்றுக் குறைவாக உள்ளது.

அத்துடன் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு 10 வீதம் என்றும் ஒன்ராறியோ பொது சுகாதாரத் தறை தலைவரான டாக்டர் பீட்டர் டொன்னெல்லி கூறினார்.

கிரேட்டர் ரொராண்டோ பகுதியில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்ளூர் சுகாதார ஒருங்கிணைப்பு வலையமைப்பின் கீழ் உள்ள மெக்கன்சி ரிச்மண்ட் ஹில், மார்க்கம் ஸ்டாஃப்வில்லே, சவுத்லேக், ஹம்பர் ரிவர் மற்றும் நொர்த் யார்க் பொது மருத்துவமனைகள் 153 தீவிர சிகிக்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. இவற்றில் வெறும் 13 மட்டுமே முக்கியமான பராமரிப்பு படுக்கைகளாக காணப்படுகின்றன.

அத்துடன் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வென்டிலேட்டர்களுக்கான அதிக தேவை உள்ளதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 33 அவசர சிகிச்சை நோயாளிகள் உள்ளனா். ஆனால் அங்கு 26 வெண்டிலேட்டா்களே உள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாண அரசின் கையிருப்பில் உள்ள வெண்டிலேட்டா்கள் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE