Friday 26th of April 2024 08:17:14 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
பிரான்ஸ் கொரோனா இறப்பு வீதம்  முன்னைய நாட்களில் இருந்து வீழ்ச்சி!

பிரான்ஸ் கொரோனா இறப்பு வீதம் முன்னைய நாட்களில் இருந்து வீழ்ச்சி!


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தினசரி இறப்பு எண்ணிக்கை முன்னைய நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீழ்ச்சியைக் காண்பித்தது. அத்துடன், தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளா் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்ததுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை மதித்து பொது மக்கள் செற்பட்டதன் விளைவே இது. மக்களுக்கு இதற்காக நன்றி தெரிவிக்கிறேன் என சுகாதார அமைச்சா் தெரிவித்தார்.

பிரான்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 357 கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் நேற்று இறந்ததாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 441-ஆக பதிவாகியது.

மார்ச் 1 முதல் பராமரிப்பு மையங்களில் 2,189 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சோ்த்து பிரான்சின் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,078 ஆக உள்ளது.

அத்துடன் பிரான்ஸில் புதிதாக தொற்றுக்குள்ளாகி நேற்று 1,873 போ் உறுதி செய்யப்பட்டனா். இவற்றுடன் அங்கு பாதி்க்கப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளா்களின் மொத்த எண்ணிக்கை 70,478 ஆக உயர்ந்துள்ளது.

பராமரிப்பு மையங்களில் 22,361 போ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில் பிரான்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 92,839 பதிவாகியுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 17 முதல் சமூக முடக்கல் நடவடிக்கைகளை பிரான்ஸ் அறிவித்தது. இந்த முடக்கல் ஏப்ரல் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு சமூக முடக்க அறிவிப்பு மேலும் மீண்டும் நீடிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

20 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள பிரெஞ்சு குடிமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சமூக முடக்கல் நடவடிக்கைகளை தொடர்ந்து மதிக்க வேண்டும். சமூக இடைவெளியை தொடா்ந்தும் பேண வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE