Friday 26th of April 2024 03:32:51 PM GMT

LANGUAGE - TAMIL
தளபதி-65
தளபதி-65 படத்திற்கு இசையமைக்கிறார் தமன்!

தளபதி-65 படத்திற்கு இசையமைக்கிறார் தமன்!


இளைய தளபதி விஜயின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் தமன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க்தில் தயாராகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்வதால் வெளியீடு தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள விஜயின் தளபதி-65 படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதனை அவர் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். "விஜய் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக மெனக்கிட்டேன். தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது" என தமன் கூறியுள்ளார்.

இதன்முலம் விஜய் படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE