Friday 26th of April 2024 01:27:32 PM GMT

LANGUAGE - TAMIL
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு
தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைவு!

தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைவு!


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சராக இருந்து காலம்சென்ற செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்ககை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் தலைவி படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவி படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். இவர்களது தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையல், சல்மான்கானுடன் ‘மைனே பியர் கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான இந்தி நடிகை பாக்கியசிறியும் ‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கங்கனா ரணவத் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து பாக்கியசிறி கூறும்போது, தலைவி படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் என்னால் திருப்பம் ஏற்படுவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கங்கனா ரணவத்துக்கும், எனக்கும் அதிகமான காட்சிகள் உள்ளன. படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE