Friday 26th of April 2024 12:23:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும்  தலையெடுக்கும் எபோலா வைரஸ்!

கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் தலையெடுக்கும் எபோலா வைரஸ்!


உலகில் முன்னா் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திய எபோலா வைரஸ் கொங்கோவில் மீண்டும் பரவிவருவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

கொங்கோவில் மேற்கு நகரமான மபந்தகாவில் புதிய எபோலா தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா்.

ஆறு எபோலா தொற்று நோயாளா்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் நால்வா் இறந்துவிட்டனா் எனவும் கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உகாண்டா எல்லை ஊடாக கொங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் பரவி 2,200 க்கும் மேற்பட்டோர் முன்பு உயிரிழந்த எபோல தொற்று மையமாக இருந்த இடத்தில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் மபந்தகா உள்ளது. அங்கு இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்களால் தொற்று நோய் தடுப்பு முயற்சிகள் தடைபட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

1976 ஆம் ஆண்டில் கொங்கோ - எபோலா ஆற்றின் அருகே முதன்முதலில் இந்த எபோலா வைரஸ் கண்டறியப்பட்டது. அன்று முதல் இதுவரை அங்கு 11 முறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

மபந்தகாவில் புதிய எபோலா தொற்றுநோய் பரவியுள்ளதை கொங்கோ சுகாதார அமைச்சர் எட்டெனி லாங்கோண்டோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினாா். நாங்கள் அவர்களுக்கு மிக விரைவாக தடுப்பூசி மற்றும் மருந்தை அனுப்பவுள்ளோம் எனவும் அவா் தெரிவித்தாா்.

எபோலா வைரஸ் இரத்தக் கசிவுடன் கூடிய காய்ச்சலை ஏற்படுத்ததும் ஒரு தொற்று நோயாகும். பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகிறார்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடியில் மத்தியில் எபோலா வைரஸ் தொற்று நோயும் கண்டறியப்பட்டுள்ளமையானது கொங்கோவுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2017 முதல் மூன்று முறை எபோலா தொற்று நோய் நெருக்கடியை கொங்கோ சந்தித்துள்ளது. 6,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற அம்மை நோய், 3,000-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுநோயாா்களையும் கொண்டுள்ள இந்நாட்டில் இதுவரை 71 போ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

இறுதியாக 2018 ஆம் ஆண்டில் மபந்தகாவில் எபோலா தொற்று நோய் கண்டறியப்பட்டது. இது அங்கு வேகமாக பரவக்கூடும் அல்லது 10 மில்லியன் மக்கள் வசிக்கும் கின்ஷாசாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டது.

எனினும் நடமாடும் கை கழுவும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பு முயற்சி அங்கு முன்னெடுக்கப்பட்டது. வீட்டுக்கு வீடு விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. விரைவாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு எபோலா தொற்று அங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் “கொவிட்-19 மட்டும் இந்த உலகை அச்சுறுத்தும் நோய் அல்ல எபோலா உள்ளிட்ட இன்னும் சில வைரஸ் அச்சுறுத்துல்களும் உள்ளன” என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளாா். ருவிட்டா் பதிவொன்றில் அவா் இதனைத் தெரிவித்துள்ளாா்.

இப்போதைக்கு கொரோனா வைரஸ் மீது எமது கவனம் இருந்தாலும் எபோலா போன்ற பிற தொற்று நோய்கள் தொடா்பிலும் மீதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் கேப்ரியேசஸ் தெரிவித்தாா்.

கொங்கோ விலங்குகள் பண்ணைகளில் எபோலா வைரஸ் உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் எபோலா வைரஸ் தாக்குதல் அச்சம் நிலவுகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE