Friday 26th of April 2024 06:12:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
மே.இந்தியத் தீவுகள் தொடர்: இங்கிலாந்து வீரர்களுக்கு 2வது தடவையாக கொரோனா பரிசோதனை!

மே.இந்தியத் தீவுகள் தொடர்: இங்கிலாந்து வீரர்களுக்கு 2வது தடவையாக கொரோனா பரிசோதனை!


சுற்றுலா மே.இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இரண்டாவது தடவையாக இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. மே.இந்தியத் தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து- மே.இந்தியத் தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு 2-வது கட்டமாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வீரர்கள், ஊழியர்கள் என 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள்.

இதற்கிடையே இங்கிலாந்து சென்றிருந்த மே.இந்தியத் தீவுகள் வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

மே.இந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களான, டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகியோர் கொரோனா வைரசுக்கு பயந்து இங்கிலாந்து செல்ல மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE