Wednesday 8th of May 2024 12:12:13 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு  வைக்கப்படுவதாக மிச்சேல் பச்லெட் கவலை!

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவதாக மிச்சேல் பச்லெட் கவலை!


இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 44 அமா்வை நேற்று ஆரம்பித்து வைத்துப் பேசும்போதே அவா் இவ்வாறு கவலையை வெளிப்படுத்தினாா்.

பல உலக நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினர் கொரோனா தொற்று நோயுடன் தொடா்பான குரோத பேச்சுக்களால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பல்கேரியா, பாகிஸ்தான் மற்றும் ஹைட்டி உட்பட பல நாடுகளில் சிறுபான்மை சமூகத்தவா்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிா்வினையாற்றும் அதேவேளை, இதன்போது மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மிச்செல் பச்லெட் அழைப்பு விடுத்தாா்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தொடா்ந்து முஸ்லிம் சமூகத்தினர் அரசாங்க அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களைப் புறக்கணித்து இறந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்ததன் மூலம் இஸ்லாமிய மரபுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றன என பேரவையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் விமா்சித்தனா்.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE