Friday 26th of April 2024 09:03:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
லிபியாவில் நிலைமை மோசமடைவதாக  ஐ.நா. பொதுச் செயலாளா் எச்சரிக்கை!

லிபியாவில் நிலைமை மோசமடைவதாக ஐ.நா. பொதுச் செயலாளா் எச்சரிக்கை!


லிபியாவில் மோதல் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதுடன், அங்கு வெளிநாடுகளின் தலையீடுகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் நேற்று புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையை எச்சரித்தார்,

2011 ஆம் ஆண்டில் நேட்டோ ஆதரவுடன் முயம்மர் கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் லிபியாவில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.

2014 முதல் லிபியா பிளவுபட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் தலைநகரம் திரிபோலி மற்றும் வடமேற்கைக் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தார் பெங்காசி கிழக்குப் பகுதிகளை ஆட்சி செய்து வருகிறாா்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் அரசாங்கத்துக்கு துருக்கி ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE