Friday 26th of April 2024 04:01:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
திருப்பதி அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி: 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு!

திருப்பதி அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி: 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு!


திருப்பதி கோவிலில் கடமையாற்றி வந்த அரச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து அங்கு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக 15 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக ஆலய கருமபீடத்தில் பற்றுச் சீட்டு விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இணையவழி மட்டுமே திருப்பதி கோவில் தரிசன பற்றுச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஓகஸ்ட் 5ந்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE