Friday 26th of April 2024 02:20:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
சுவிற்சா்லாந்தில் அகதித் தஞ்சம்  கோரிய 6 பேருக்குக் கொரோனா!

சுவிற்சா்லாந்தில் அகதித் தஞ்சம் கோரிய 6 பேருக்குக் கொரோனா!


சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையம் ஒன்றில் ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கீஸ்டோன்-எஸ்.டி.ஏ. செய்தி முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து குறித்த மையத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மேலும் 25 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய இடங்களைப் போலவே புகலிடக் கோரிக்கையாளா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையங்களிலும் கோவிட் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படுகின்றன.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் புகலிடம் மையங்களின் 40 வீத திறனுக்கு மேல் நபா்களை அனுமதிக்கக் கூடாது என்ற சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன.

எனவே, சமூக இடைவெளி விதிமுறைகளை பேணக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு உள்ளன எனவும் கீஸ்டோன்-எஸ்.டி.ஏ. செய்தி முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

டப்ளின் ஒப்பந்தத்தின் பிரகாரம் புகலிடக் கோரிக்கையாளா்களை ஏனைய ஷெங்கன் உறுப்பு நாடுகளுக்கு மாற்றுவதை சுவிட்சர்லாந்து நிறுத்தியுள்ளது, அதேவேளை, நாட்டிற்குள் இடமாற்றங்களும் தவிர்க்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 120 மற்றும் 180 புகலிடக் கோரிக்கையாளா்கள் சுவிட்சா்லாந்தில் புகலிட மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச் மாதத்தில் 965 புகலிடம் கோரிக்கையாளா்கள் பதிவு செய்யப்பட்டனர். ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சுவிட்சர்லாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE