Friday 26th of April 2024 04:54:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது! (காணொளி)

பிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது! (காணொளி)


தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்போஸ் நிகழ்சியின் 4 ஆவது தொடர் பற்றி முன்னோட்டத்தினை குறித்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பிரபல நடிகருமான கமல் குறித்த நிகழ்சியை இம்முறையும் தொகுத்து வழங்கவுள்ளதாக விளம்பரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிகழ்ச்சிக்கான விளம்பர காணொளியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “நலமா? அன்றாடம் நாம் ஒருவரையொருவர் எதார்த்தமாக கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவியிருக்கும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது.

அமேசானில் தீப்பிடித்தால் இங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்குப் போகவில்லை என்றால் நம்மை நம்பி இருக்கிற ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிடப் போகிற ஹோட்டல், டீக்கடை, மீன்கடைக்கார ஆயா, நமக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இப்படி சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருப்பவர்கள் 5 மாத காலங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வீட்டில் வேலையில்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தியபடி பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதேபோல் நீங்களும் உங்கள் வேலையைத் தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு. சரி இப்போது வேலையை ஆரம்பிக்கலாமா? என்ன வேலை. பிக்பாஸ் சீசன் 4” என்று கமல் தெரிவித்திருக்கும் காணொளி வெளியாகியிருக்கிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE