Friday 26th of April 2024 11:29:35 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 9 ஆயிரத்தை கடந்து தொடரும் கொரோனா உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்தை கடந்து தொடரும் கொரோனா உயிரிழப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்பில் தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் நாளாந்த நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பி.பகல் வெளியிடப்பட்ட அவ் அறிக்கையின் அடிப்படையில்,

நேற்றைய தினம் (செப்-23) 5 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னையில் நேற்றைய தினம் 980 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டநிலையில் இதுவரை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் இதுவரை 5 இலட்சத்து 2 ஆயிரத்து 740 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து தற்போது 46 ஆயிரத்து 249 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE