Tuesday 19th of March 2024 12:55:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
3 மணி நேரங்களில் விண்வெளியை  அடைந்து ரஷ்ய விண்கலம் புதிய சாதனை!

3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து ரஷ்ய விண்கலம் புதிய சாதனை!


3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்ய விண்கலம் 3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

கஜகஸ்தானில் இருந்து செயற்படும் ரஷ்யாவின் பைகானுர் தளத்தில் இருந்து சோயுஸ் எம்.எஸ். 17 என்னும் விண்கலம் புதன்கிழமை ஏவப்பட்டது.

2 ரஷ்ய வீரர்கள் மற்றும் நாசாவின் ஒரு விண்வெளி வீரர் ஆகியோரை சுமந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சரியான இலக்கை நோக்கி பயணித்ததுடன் 3 மணிநேரத்தில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்தது.

இந்த விண்வெளி ஓடத்தில் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் ஆகிய 3 புதிய பணியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

தற்செயலாக விண்வெளி வீரர்களில் ஒருவரான ரூபின்ஸின் 42 ஆவது பிறந்தநாளில் விண்கலம் ஏவப்பட்டது .

இதற்காக ரஷ்ய விமான கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ரூபின்ஸூக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ஒரு அழகான நாள். நீங்கள் அதை அற்புதமாக கொண்டாடினீர்கள் என கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு அதிகாரி கூறினார்.

இது எனது வாழ்நாளில் மிகச் சிறந்த பிறந்த நாள். "மிக்க நன்றி" என்று ரூபின்ஸ் பதிலளித்தார்.

பொதுவாக ஒரு சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஆறு மணிநேரங்கள் ஆகும். இந்நிலையில் புதிய நுட்பத்தின் மூலம் இந்த விண்கலம் 3 மணி நேரங்களில் விண்வெளி மையத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE