Tuesday 19th of March 2024 06:41:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
சென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு!

சென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு!


ஐபிஎல்2020 ரீ-20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளமை சென்னை ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டங்களில் வெளியேறினா. அடுத்துவந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டத்தை எடுத்த நிலையில் வெளியேறினார்.

25 பந்தில் 22 ஓட்டங்களை எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, அணித்தலைவர் டோனி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்டனர்.

ஆனால், ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை.

19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ஓட்டங்களிலும், 28 பந்துகளை சந்தித்த டோனி 22 ஓட்டங்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த அணி எடுத்த மிகக்குறைவான ஓட்ட எண்ணிக்கை இது ஆகும்.

இதையடுத்து, 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.

முதலில் முக்கிய விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான், அதன்பின் நிதானமாக ஆடியது.

ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பட்லர் 70 ஓட்டங்களையும், ஸ்மித் 26 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் அணியின் பட்லர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி மூன்று வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றும் 4 போட்டிகளில் சென்னை விளையாட வேண்டிய நிலையில் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு நேற்றைய தோல்வி இட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE