Tuesday 19th of March 2024 04:41:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனா- ரஷ்யா இராணுவக் கூட்டணியை  உருவாக்கத் தயார் என்கிறார் புடின்!

சீனா- ரஷ்யா இராணுவக் கூட்டணியை உருவாக்கத் தயார் என்கிறார் புடின்!


நேட்டோ போன்ற மேற்குலகின் இராணுவ கூட்டணியை ஒத்த ஒரு இராணுவக் கூட்டணியை ரஷ்யா – சீனா இணைந்து உருவாக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கான ரஷ்யாவின் விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளார்.

மொஸ்கோவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு மற்றும் கலந்துரையாடல் மன்றமான வால்டாய் அமைப்புக்களுடன் இணைய வழி நேரலை கலந்துரையாடலின்போது இதனை அவர் தெரிவித்தார்.

ரஷ்யா – சீனா இணைந்த இராணுவக் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை நிராகரிக்க முடியாது எனவும் புடின் கூறினார்.

ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வழக்கமான இராணுவப் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றன. இராணுவ ஒத்துழைப்பில் இரு நாடுகளும் சிறப்பான உறவைப் பேணுகின்றன. ஆயுத விற்பனை மற்றும் கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வெற்றிகரமாகவே உள்ளன.

இந்நிலையில் கோட்பாட்டு அடிப்படையில் ரஷ்யா – சீனா இணைந்த இராணுவக் கூட்டணியும் சாத்தியமாகக் கூடியதே எனவும் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைப்பதற்கான யோசனையையும் தான் ஆதரிப்பதாக புடின் தெரிவித்தார். எனினும் இது குறித்த முடிவை தனது நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு சீனாவே எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களின் உற்பத்தியை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் முடக்குவதை நோக்கமாகக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் சீனா மட்டுமல்ல பிற அணுசக்தி நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தினார்.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் முதல் மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், (START I), 1991 இல் கையெழுத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE