Friday 26th of April 2024 01:00:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாட்டின் சுபீட்சத்திற்காக எந்த  நடவடிக்கையும் எடுக்க தயங்கேன்; நாட்டு மக்களுக்காக விசேட உரையில் ஜனாதிபதி!

நாட்டின் சுபீட்சத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கேன்; நாட்டு மக்களுக்காக விசேட உரையில் ஜனாதிபதி!


வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். என்னிடம் எனது நாடு குறித்த ஒரு தொலைநோக்கு உள்ளது. ஒரு பயனுறுதிமிக்க பிரஜையாக, ஒற்றுமை உணர்வோடு, ஒழுக்கப் பண்பாட்டுடன் செயற்பட்டு, உங்களினதும் எனதும் தாய் நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவா் கூறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாக ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்

அவரது உரையின் முழு விபரம் வருமாறு,

வணக்கம்,

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்தநாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்களமக்கள்வாக்களித்தனர் என்பது உண்மை.

பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முகங்கொடுத்து சிங்கள இனம், எமது மதம், தேசிய வளங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது என்ற நியாயமான அச்சம் இருந்ததால் அவர்கள் அணிதிரண்டனர்.

மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கியவேண்டுகோள் 'நாட்டைகாப்பாற்றுங்கள்' என்பதாகும்.

இந்தக் குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இதுபற்றி இனியும் அச்சப்படவோ, சந்தேகப்படவோதேவையில்லை.

எனது ஆட்சிக்காலத்தில், இனம், மதம் என்ற பேதமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்யும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவேன் என்றும், இந்தநாட்டின் உச்ச அரசியலமைப்பின்படி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பேன் என்றும் அன்று ருவன் வெலிசேய புன்னிய பூமியில் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் நான் எப்போதும் செயற்பட்டுவந்துள்ளேன்.

ஒவ்வொரு மாதமும் நான் மூன்று நிகாயக்களினதும் முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளடங்கிய ஆலோசனை சபையை சந்தித்து ஆட்சி குறித்த அவர்களின் ஆலோசனையைப் பெறும் நடைமுறையொன்றையும் நான் பின்பற்றிவருகின்றேன்.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு, மத தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இந்தநாட்டில் பல உயிர்கள் பலியாகியிருந்தன. பாதாள உலக செயற்பாடுகள் தீவிரம் பெற்று நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்தது. இலங்கை சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்தது.

புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பலவீனமடைந்திருந்த காரணத்தினால் நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தொல்பொருள் பெறுமதி வாய்ந்த வரலாற்று தளங்கள் கூட தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

நான் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் பாதுகாப்புப்படைப் பிரிவுகளுக்கு பொருத்தமான அதிகாரிகளைநியமித்து அவர்களது பொறுப்புகளை குறைவின்றிநிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் அளித்தேன். சீர்குலைந்திருந்த புலனாய்வுத்துறை சேவைகளை மறுசீரமைத்து அவற்றுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை எடுத்தேன்.

அந்தவகையில் எந்தவிதமான தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த மிகவும் முறையான மற்றும் செயற்திறமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களைப்போன்று சிறைச்சாலைகளுக்குள்ளிருந்து போதைப் பொருள் கடத்தல் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொள்ள இனியும் இடமில்லை.

இந்த நாட்டில் மக்கள் இனியும் பாதாள உலக கும்பல்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு பயந்து வாழவேண்டியதில்லை.

எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் இப்போது ஒரு விசேட செயலணியை அமைத்துள்ளேன்.

நாம் இதுவரை செய்த அனைத்துமே ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களினால் மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 'சுபீட்சத்தின்நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரமாகவே ஆகும்.

படைவீரர்களை காட்டிக்கொடுக்கும், தேசிய வளங்களை விற்கும், குறுகியகால இலாபத்திற்காக எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கத்தயாராக இருக்கும், நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுசக்திகள் தலையிட அனுமதிக்கும் யுகம் இப்போது முடிந்துவிட்டது.

எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்குத்தயாரான, எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாத, சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு ஒரு தரப்பாக இல்லாத, ஒரு பெருமைமிக்க, இறைமை கொண்ட தேசமாக எமது நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளோம். அதனால் தான் இன்று பிராந்திய சக்திகளிடமிருந்தும் உலக வல்லரசுகளிடமிருந்தும் எமக்கு உரிய மரியாதை கிடைக்கின்றது.

மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தில் பல மனப்பான்மை மாற்றங்களைச் செய்யமுடிந்தது. ஜனாதிபதித் தேர்தலுடன் அதைத் தொடங்கினோம். பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் சுவரொட்டிகள் இல்லாத, அவமதிப்பு மற்றும் அவதூறுகளிலிருந்து விடுபட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் நாட்டிற்கு அறிமுகப்படுத்தினோம். அதன்பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் முன்மாதிரியான ஒரு தேர்தலாக குறிப்பிடலாம்.

பெரும்பான்மையான வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தனர், தேர்தல் சட்டமீறல்கள் குறைந்தபட்சமாகவே இருந்தன. வன்முறைகள் அல்லது தேர்தல் மோசடிபற்றிகூடகேட்கப்படவில்லை.

இந்த மாற்றத்துடன் மக்களும் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் பலமுன்னாள் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்ற வாய்ப்பு கிடைக்காதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்விளைவாக, புதிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குசிலகாலத்திற்கு முன்பு 225 பேருமே வேண்டாம் என்ற கருத்தில் இருந்தமக்களின் கௌரவத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆட்சிக்குவந்தபிறகும், ஜனாதிபதி பதவி என்பது ஒரு பொறுப்பேயன்றி வரப்பிரசாதம் அல்ல என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நான் செயல்பட்டேன். அதன்படி, தேவையற்ற செலவுகள், விரயங்கள் மற்றும் பயனற் நடவடிக்கைகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்தகாலப் பிரிவில் நாங்கள் நீதித்துறைக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்தவகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை. நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அனைத்தும் எந்தவொரு அரசியல் செல்வாக்கு மின்றி தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன. அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் முறையை நாங்கள் முற்றிலும் நிராகரித்தோம். சட்டத்தின் ஆட்சியை நாம் எவ்வாறு உண்மையாக நிலை நிறுத்துகிறோம் என்பதை வார்த்தையால் அன்றி முன் மாதிரியாகக் காட்டினோம்.

உயர் அரசாங்க பதவிகளுக்கு பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர்களின் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம். இத்தகைய கொள்கையொன்றை இதற்கு முன்னர் எந்தஅரசாங்கமும் செயல்படுத்தவில்லை. அரசியல் செல்வாக்கு காரணமாக பொருத்தமற்ற நபர்கள் அரசநிறுவனங்களின் தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை இதுமேலும் தடுத்தது.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பாரிய வீழ்ச்சியை கண்டு 2.1%என்ற மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது.

2014 இல் 4.3% ஆககுறைந்திருந்த வேலைவாய்ப்பின்மை 2019 ஆகும்போது 4.8%ஆகஉயர்ந்தது.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி துரிதமாக வீழ்ச்சி கண்டிருந்த காரணத்தினால் நிதிப்பிரிவு சீர்குலைந்து பொருளாதாரம் பெரும் நிச்சயமற்ற நிலைக்கு முகம் கொடுத்திருந்தது.

சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடானஆண்டுவருமானம்குறைந்துகொண்டிருந்தது.

நாட்டின் கடன் சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தது. அரசாங்கம்மக்கள் மீதுபெரும் வரிச்சுமையை சுமத்தியிருந்தது. அதிகவட்டி விகிதங்கள் காரணமாக, சுதேசவணிகங்கள் பெரும்சிரமங்களை எதிர்கொண்டன. இந்தநிலைமையைக் கட்டுப்படுத்தபலவிரைவானநடவடிக்கைகளைஎடுத்தோம்.

வரிச்சுமை குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. குறிப்பாக சம்பள வருவாய் மீதான நேரடி வரிகுறைக்கப்பட்டதுடன் வட்டி மீதான நிறுத்திவைக்கும் வரிநீக்கப்பட்டது.

உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு பல வரிச்சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரிமுறைமைகள் எளிமைப்படுத்தப்பட்டன. உள்நாட்டு உற்பத்திக்கு சாதகமற்றபோட்டி இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வட்டிவிகிதங்களை பெருமளவில் குறைப்பதன்மூலம், கடன்கள் தேவைப்படும் மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக படிப்படியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அந்நியசெலாவணி வீதத்தை நிலையானதாக பேணநடவடிக்கை எடுத்தோம்.

வேகமாக உயர்ந்து சென்றவெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்தினோம். அதேபோன்று எங்கள்நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அனைத்து வெளிநாட்டு கடன் தவணைகளையும் நாங்கள்செலுத்தினோம்.

கடந்தஅரசாங்கம்உள்நாட்டுவழங்குனர்களுக்குசெலுத்தாதிருந்தநிலுவைத்தொகையில் பெருமளவை நாங்கள் செலுத்த நடவடிக்கை எடுத்தோம். உரத்திற்குரூ. 24 பில்லியனும், மருந்துகளுக்குரூ. 32 பில்லியனும், நிர்மாணத்துறைக்குரூ. 119 பில்லியனும், சிரேஷ்டபிரஜைகளின்உதவித்தொகைரூ. 20 பில்லியனும், பல்வேறு அமைச்சுக்களுக்குசேவைகளை வழங்கியவர்களுக்குரூ. 47 பில்லியனும்செலுத்தினோம்.

இந்தவகையில்சமூகத்திற்குநிதியைவிடுவித்ததுமுடங்கிப்போனநாட்டின்பொருளாதாரசெயல்முறையைமீண்டும்செயல்படுத்தஉதவியது.

எமதுநாட்டில்பெரும்பான்மையானகிராமப்புறமக்கள்ஈடுபட்டுள்ளவிவசாயத்துறைக்கு புத்துயிரளிக்க குறுகியகாலத்தில்நாங்கள் பெருமளவுபணிகளைசெய்துள்ளோம்.

நெல்கொள்வனவுக்கான உத்தரவாத விலைரூ. 32 லிருந்துரூ. 50 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. உரமானியம் இலவசமாக வழங்கப்பட்டது.

உள்ளூர்விவசாய உற்பத்தியாளர்களைப்பாதுகாக்க, மிளகுபோன்றபயிர்களின்மீள் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டதுடன் சில விவசாய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. நெல், சோளம், தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிவரிகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன.

எத்தனொல்இறக்குமதிமுற்றிலும்தடைசெய்யப்பட்டது.

நாடுமுழுவதும் தரிசுநிலங்களை மீண்டும்பயிரிடுவதன்மூலமும், இளையதலைமுறையினரை விவசாயத்திற்குஈர்ப்பதன்மூலமும், மக்களை வீட்டுத்தோட்டச்செய்கைக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயத்துறையில் ஒருபுதிய உத்வேகத்தைஉருவாக்கமுடிந்தது.

எத்தகைய சிரமங்களுக்குமத்தியிலும், எங்கள் ஏற்றுமதிவீழ்ச்சியடையநாங்கள் இடமளிக்கவில்லை. தற்போது எங்கள் மொத்த ஏற்றுமதி வருவாய் முன்னைய ஆண்டுகளைவிட அதிக அளவில் உள்ளது.

கிராமப்புறமக்களின்வறுமைக்குதீர்வுகாண்பதுநமதுபொருளாதாரக்கொள்கையில்முன்னுரிமைபெறுகின்றது.

அந்தவகையில்உடனடிகவனம்செலுத்தப்படவேண்டியபபலதுறைகளைநாம்இனம்கண்டுள்ளோம்.

நாட்டின் ஏழ்மையானகு டும்பங்களைஇலக்காகக்கொண்டு 100,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.

இந்த ஒவ்வொருவேலை வாய்ப்பின்மூலமும், மிகவும் ஏழ்மையானகுடும்பத்தின் எதிர்காலத்தைவலுப்படுத்த ஒருஅடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிகவும் பொருத்தமானவர்களைத்தேடி 35,000 தொழில்கள் இதுவரைவழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளவர்களுக்குமிகக்குறுகியகாலத்தில்தொழில்கள்வழங்கப்படும்.

நாட்டின் செல்வத்தை செலவிட்டு கல்விவழங்கப்பட்ட ஏராளமானபட்டதாரிகள் நீண்டகாலத்திற்குவேலையில்லாமல் இருந்தால்அதுகல்விமுறையின்தவறு. பல்கலைக்கழக கல்விசீர்திருத்தங்கள் மூலம்,

எதிர்காலத்தில் அந்தபிழையை சரிசெய்வதுடன் இதுவரைவேலையற்றிருந்த 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் மேலும் அவர்கள் நாட்டிற்கு உற்பத்தித்திறன் வாய்ந்தசேவையைச் செய்யத்தேவையான பயிற்சியையும் வழங்க நடவடிக்கைஎடுத்தோம்.

கிராமப்புறமக்களிடையேவறுமையைஒழிப்பதற்கானமற்றொருநடவடிக்கையாக, காணிகளைஇழந்த 20,000 குடும்பங்களுக்கு ஒருஏக்கர் வீதம்காணிகளை வழங்கநடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒவ்வொருகுடும்பத்திற்கும்குடிநீரைவழங்குவதற்கானஎங்கள்திட்டத்தின்கீழ் 429,000 குடும்பங்களுக்கு நாடுமுழுவதும் நீர்வழங்குவதற்கான ஆரம்பபணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒருலட்சம் கி.மீவீதிகளை அமைக்கும்திட்டத்தின்கீழ்மூன்று 10,000 கி.மீதிட்டங்கள்ஏற்கனவேதொடங்கப்பட்டுள்ளன.

10,000 பாலம்கட்டுமானதிட்டத்தின் கீழ்சுமார் 5,000 பாலங்களின் பணிகள்நிறைவடைந்துவருகின்றன.

இந்தஆண்டுமட்டும், நகர்ப்புறகுறைந்த வருமானம்ஈட்டுபவர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் 20,000 க்கும்மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒருகிராமத்திற்குஒருவீடுதிட்டத்தின்கீழ் 14,000 கிராமப்புறவீடுகள்நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.

4000 தோட்ட வீடுகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்படும்.

பல்கலைக்கழகங்களுக்குஅனுமதிக்கப்படும்மாணவர்களின்எண்ணிக்கைதற்போது 10,000 ஆல்அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடுசுதந்திரம் பெற்றபின்னர் ஒருவருடத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்மாணவர்களின் எண்ணிக்கையில் வேறுஎந்தவருடத்திலும் இதுபோன்ற அதிகரிப்புகாணப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களின் திறனைஎதிர்காலத்தில் இதேமுறையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் சாதாரணசூழ்நிலையில் செய்யவில்லை. பலசவால்களுக்கு மத்தியிலேயே செய்தோம். நான் ஜனாதிபதிபதவியை ஏற்றுக்கொண்ட நாள் முதல் பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை ஒரு சிறுபான்மை அரசாங்கத்துடனேயேபணியாற்றவேண்டியிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சியிடமே இருந்தகாரணத்தினால் எந்தவொருசட்டத்தையும் வரவுசெலவுத்திட்டத்தையும் நிறைவேற்றும் வாய்ப்புகிடைக்கவில்லை.

ஜனாதிபதித்தேர்தல்முடிந்துஒருமாதத்திற்குள்கோவிட்தொற்றுநோய்உலகம்முழுவதும்பரவத்தொடங்கியது. 2020 ஜனவரியில் சீனாவின் வுஹான்நகரம் மூடப்பட்டபோது, உடனடியாக தீர்மானம் மேற்கொண்டு 33 இலங்கை மாணவர்களைபாதுகாப்பாக இலங்கைக்குஅழைத்துவந்து, அவர்களைமு றையாக தனிமைப்படுத்திவீட்டிற்கு அனுப்பி, உலகின் பிறநாடுகளுக்கு ஒருமுன்மாதிரியைஅமைத்தோம்.

இலங்கையில்முதல் கோவிட் நோயாளிகண்டறியப்படும்போது, ஏற்படக்கூடியகோவிட் அலையை கட்டுப்படுத்த ஒரு செயலணியை நாங்கள் ஏற்கனவே அமைத்துதிட்டங்களை உருவாக்கத்தொடங்கியிருந்தோம். இதனால் கொரோனாவின் முதல் அலையை மிகவிரைவாக கட்டுப்படுத்தமுடிந்தது. கொரோனாவைக்கட்டுப்படுத்துவதில்இலங்கையின்வெற்றிஉலகசுகாதாரதாபனத்தினால்கூடபாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப்பாதுகாக்கநாட்டைசுமார்இரண்டுமாதங்களுக்குமுற்றிலுமாகமூடவேண்டியிருந்ததுஎன்பதைநாம்மறந்துவிடக்கூடாது.

இக்காலப்பகுதியில்மக்கள்வாழ்க்கையில்பொருளாதாரதாக்கத்தைகுறைக்கஅரசாங்கம்செயல்பட்டது. அத்தியாவசிய உணவை மக்களுக்குகிடைக்கச் செய்வதற்கான முறைகள் வகுக்கப்பட்டன. வருமானத்தை இழந்த 59 லட்சம்குடும்பங்களுக்குரூ. 5 ஆயிரம்கொடுப்பனவுஇரண்டுமுறைவழங்கப்பட்டது. கடினமானகாலங்களில்பலஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவரி நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர்பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரைரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாகசெலவிட்டுள்ளது.

நான்கடந்தஆண்டுநவம்பரில்ஆட்சிக்குவந்தேன். இந்தஆண்டு ஆகஸ்டில் ஒன்பதுமாதங்கள் கழித்து நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் செயல்பட்டவிதத்தை மக்கள்அங்கீகரித்ததால்தான் அவர்கள் பாராளுமன்றதேர்தலில் எங்களுக்கு 2/3 பெரும்பான்மையை வழங்கினர்.

எனது வெற்றி அல்லதுதோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல்மக்கள் கருத்தேயன்றி சமூகஊடகங்கள்மூலம் அரசியல் எதிரிகளால்ப ரப்பப்படும் தவறானபிரச்சாரங்கள்அல்ல.

கோவிட்டின்இ ரண்டாவது அலை இன்றுஉலகம் முழுவதும் பரவிவருகிறது. இதுவேகமாக பரவும் கோவிட்வைரஸின் புதியவகையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுஉலகின் ஒவ்வொருநாட்டிற்கும் ஒருபுதியசவால் என்றபோதும் இந்த முறை எமக்கு கடந்தகால அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிசோதனை அளவை அதிகரித்தல், தொற்றாளர்களையும் தொடர்புடையவர்களையும் முன்கூட்டியே கண்டறிதல்மற்றும் சரியானதனிமைப்படுத்தப்பட்டமுறைகளைப் பயன்படுத்துதல், அவதானத்திற்குரிய பிரதேசங்களைமட்டும் வேறுபடுத்தி ஏனையபிரதேசங்களில் இயல்புவாழ்க்கையைபேணுதல் போன்றநடவடிக்கைகளில் இந்தஅனுபவம்மிகவும்பயன்படும்.

கடந்தமுறையைப்போலவே, இந்தமுறையும்நாங்கள் ஒருதிட்டத்துடன் செயல்படுகிறோம். நோய்பரவுவதை வெற்றிகரமாககட்டுப்படுத்துவதோடுமட்டுமல்லாமல், நோய்த்தொற்றுடையவர்கள் என்றுகண்டறியப்பட்டுசிகிச்சைக்காகஅனுப்பப்பட்டவர்களின்இறப்புஎண்ணிக்கையை 0.05%க்கும் குறைந்தளவில்பேண எமதுசுகாதாரத்துறைக்குமுடியுமாகியுள்ளது.

எனவே,

நாம் அனைவரும் சுகாதார ஆலோசனைகளைப் உரியமுறையில் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட்டால்,

முதல் கொரோனா அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதைப்போலவே எதிர்காலத்திலும் இந்த புதிய சூழ்நிலையை நாம்கட்டுப்படுத்தமுடியும்.

நாட்டின்அபிவிருத்திக்குநேரடியாகபங்களிக்கக்கூடியபலதுறைகளைஅடையாளம்காண்டு, அவற்றுக்கு பொறுப்பான அமைச்சர்கள்மற்றும்இராஜாங்கஅமைச்சர்களைநியமிக்கவும், அவர்களுக்குபொருத்தமானவிடயத்துறைகளையும்பணிகளையும்வழங்கவும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துஅமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அபிவிருத்திதிட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளைதங்கள்அமைச்சுக்களுக்குநேரடிஒதுக்கீடுசெய்துள்ளதாலும், நிதிப்பொறுப்பைக் கொண்டிருப்பதாலும் தடையின்றிதங்கள்பொறுப்புகளைநிறைவேற்றமுடியும்.

அமைச்சுக்களை ஒதுக்கும்போதுநாட்டின் பெரும்பான்மையானமக்களில்தாக்கம் செலுத்தும்விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிமற்றும் பாரம்பரியகைத்தொழில்கள் மற்றும் சுய தொழில்வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில்விசேடகவனம்செலுத்தப்பட்டது.

'மகிழ்ச்சியானகுடும்பம்' என்ற சுபீட்சத்தின் நோக்குதிட்டத்தில்குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதில்ப ல்வேறு சமூகமட்டங்களில் வாழும்சமூகங்களின்வீட்டுத்தேவைகளுக்குவிசேடகவனம் செலுத்தப்பட்டது. இதற்காகதனியான மூன்று இராஜாங்க அமைச்சுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.

மக்களின்வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்நோக்கத்துடன்நகர்ப்புற மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்புஅபிவிருத்திக்கு விசேடகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகஅந்நியசெலாவணியைசெலவிட்டுமருந்துகளைஇறக்குமதிசெய்வதற்குபதிலாக, உள்நாட்டில் பலமருந்துகளை உற்பத்திசெய்ய ஆரம்பித்துள்ளோம். மருந்துப்பொருட்களை இறக்குமதிசெய்வதில் பாரிய ஊழலை ஒழிக்கநாங்கள் நடவடிக்கைஎடுத்துவருகிறோம். இந்தநோக்கத்திற்காக, மருந்துகளின் உற்பத்தி, வழங்கல்மற்றும் ஒழுங்குமுறைக்குஒருதனிஇராஜாங்க அமைச்சுநிறுவப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்குகொள்கை திட்டத்தில்கூறப்பட்டுள்ளபடி, உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமக்களை உருவாக்குவதற்கு கல்விமற்றும் திறன்மேம்பாடுமிகவும்முக்கியம். எனவே, இன்றுகல்விமற்றும்திறன்மேம்பாடுதொடர்பானஅனைத்துஅரசநிறுவனங்களையும்ஒரேஅமைச்சின்கீழ்கொண்டுவந்துள்ளோம்.

நவீனஉலகிற்குஏற்றவாறுகல்விசீர்திருத்தங்களைமேற்கொள்ளதனியானஇராஜாங்கஅமைச்சுஒன்றையும்இரண்டுசெயலணிகளையும்அமைத்துள்ளோம்.

சுதேசமருத்துவத்தைமேம்படுத்துவதற்கானஒருபடியாக, கம்பஹாவிக்ரமாரச்சிஆயுர்வேதவிஞ்ஞானகல்லூரியைபல்கலைக்கழகமாகமாற்றநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விநிறுவனங்கள்இல்லாத 10 மாவட்டங்களைத்தேர்ந்தெடுத்துஅவற்றில்நகர்ப்புறபல்கலைக்கழகஅமைப்பை (City Universities)உருவாக்கதிட்டங்கள்தயாரிக்கப்பட்டுவருகின்றன.

தற்போதுதாதியர்களுக்குவழங்கப்படும்டிப்ளோமாசான்றிதழுக்குபதிலாகஒருபட்டப்படிப்புவரைபடிக்கவாய்ப்புஅளிப்பதாகஉறுதியளித்தேன். அதன்படி, நாட்டின்அனைத்துதாதியர்கல்லூரிகளையும்ஒரேபல்கலைக்கழகத்தின்கீழ்கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது. இதுஎங்கள்தாதியர்கள்வெளிநாட்டுதொழில்சந்தையில்நுழைவதற்கானவாயிலைத்திறக்கும்.

எங்கள்திறமையானவிளையாட்டுவீரர்களுக்குஉயர்கல்விவாய்ப்புகளைவழங்கவும்விளையாட்டுபொருளாதாரத்திற்குவழிவகுக்கவும்மற்றும்தேசியவிளையாட்டுபல்கலைக்கழகமொன்றைஆரம்பிக்கவும்நாட்டின்பலபிரதேசங்களில்அதன்பீடங்களைஅமைக்கவும்நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது.

வரலாற்றில்முதல்முறையாக, பல்கலைக்கழகநுழைவைப்பெறும்ஒவ்வொருமாணவருக்கும்ஆங்கிலம், கணினிமற்றும்தகவல்தொழில்நுட்பத்தைகட்டாயபாடங்களாககற்பிப்பதற்கும்சர்வதேசதரத்திலானசான்றிதழைவழங்கவும்நாம்நடவடிக்கைஎடுத்துவருகிறோம்.

நான்வாக்குறுதியளித்தபடி, உயர்தரம்சித்தியடைந்தஅனைத்துமாணவர்களுக்கும்பல்கலைக்கழகக்கல்வியைப்பெறுவதற்காகபல்கலைக்கழகங்களின்திறனைஅதிகரிப்பதோடுமட்டுமல்லாமல், திறந்தபல்கலைக்கழகமுறையைமேம்படுத்துவதற்கும்தொலைகல்வியைமேம்படுத்துவதற்கும்நாங்கள்நடவடிக்கைகளைஎடுத்துள்ளோம். அடுத்தஆண்டுதிறந்தபல்கலைக்கழகங்களில் 10,000 புதியமாணவர்களைதொழில்நுட்பபட்டப்படிப்புகளுக்காகசேர்ப்பதற்கும், அவர்களுக்குமுதலாம்ஆண்டிலிருந்துதொழில்செய்துகொண்டேகல்வியைவழங்குவதற்கும்நாங்கள்திட்டமிட்டுள்ளோம்.

பாடத்திட்டமறுசீரமைப்பின்ஊடாகஅனைத்துபட்டப்படிப்புதிட்டங்களும்சமூகத்திற்கும்பொருளாதாரத்திற்கும்நேரடியாகபங்களிக்கக்கூடியபாடங்களாகமாறுவதைஉறுதிசெய்யபல்கலைக்கழகஅமைப்புக்குநாங்கள்அறிவுறுத்தியுள்ளோம். இதன்போதுதொழில்நுட்பகல்விமற்றும்புத்தாக்கங்களைஊக்குவிக்கவிசேடகவனம்செலுத்தப்படும்.

மக்களுக்குஉண்மையிலேயேசேவைசெய்ய, நாம்தொடர்ந்துமக்களுக்குசெவிசாய்க்கவேண்டும். இதன்காரணமாகஎன்னால்முடிந்தபோதெல்லாம்நான்மக்களிடம்செல்கிறேன். கடந்தகாலங்களில், இலங்கையின்பலபகுதிகளில்உள்ளமிகவும்கஷ்டமானகிராமங்களுக்குச்சென்றுமக்களின்பிரச்சினைகளைக்கேட்டறிந்தேன்.

இந்தவகையில், ஒவ்வொருமாவட்டத்திற்கும்பொதுவானபிரச்சினைகள்மற்றும்ஒவ்வொருபகுதிக்கும்குறிப்பிட்டபிரச்சினைகள்குறித்துநன்குபுரிந்துகொள்வதற்கும், இதுதொடர்பாகதேவையானமுடிவுகளைஎடுப்பதற்கும்எனக்குவாய்ப்புகிடைத்தது. மக்களின்எதிர்பார்ப்புகளைபூர்த்திசெய்யஅமைச்சர்களும்இராஜாங்கஅமைச்சர்களும்பாராளுமன்றஉறுப்பினர்களும்தொடர்ச்சியாகமக்களிடம்சென்றுஅவர்களதுஉண்மையானபிரச்சனைகளைவிளங்கிஅவற்றைதீர்க்கநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுநான்அறிவுறுத்தியுள்ளேன்.

ஒருநாட்டின்முன்னேற்றத்திற்குவினைத்திறனானஅரசசேவைமிகவும்முக்கியமானது. எனவே, சட்டத்தின்போர்வையில்தங்கள்பொறுப்புகளைபுறக்கணிக்காமல்மக்களின்நியாயமானதேவைகளைவிரைவாகநிறைவேற்றுமாறுஅனைத்துஅரசஊழியர்களையும்கேட்டுக்கொள்கிறேன். இதுசரியாகநடக்கிறதாஎன்றுகண்டறியநான்அவ்வப்போதுஅரசதிணைக்களங்கள்மற்றும்நிறுவனங்களுக்குச்செல்கிறேன். இதைதொடர்ந்துசெய்யநான்எதிர்பார்த்துள்ளேன். அமைச்சர்கள், இராஜாங்கஅமைச்சர்கள், அரசஉயரதிகாரிகள்தமதுநிறுவனங்களின்பணிகள்நடைபெறும்விதம்குறித்துகண்காணிக்கவேண்டும்.

அரசநிருவாகத்தில்வீண்விரயத்தையும்ஊழலையும்அகற்றுவோம்என்றுமக்களுக்குஉறுதியளித்துள்ளோம். எனவே, அனைத்துஅமைச்சுக்கள்மற்றும்அரசநிறுவனங்களில்விரயம்மற்றும்ஊழலைமுற்றிலுமாகநிறுத்தவும், சம்பந்தப்பட்டநபர்களின்தராதரங்களைப்பொருட்படுத்தாமல்சட்டத்தைஅமல்படுத்தவும்நடவடிக்கைஎடுக்கப்படும்.

ஜனநாயகநாடொன்றின்வெற்றிதங்கியிருக்கும்அடிப்படைஅரசியலமைப்பாகும். 19 ஆவதுதிருத்தத்தால்ஏற்பட்டகுழப்பத்தை 20 ஆவதுதிருத்தத்தின்மூலம்எங்களால்அகற்றமுடிந்ததுஎன்றாலும், இன்னும்சிலசர்ச்சைகள்இருக்கவேசெய்கின்றன. எனவே, புதியஅரசியலமைப்புவரைபைதயாரிக்கவும்பொதுமக்களின்கருத்துக்களைபெற்றுக்கொள்வதற்கும்நாங்கள்ஏற்கனவேஒருகுழுவைநியமித்துள்ளோம்.

பாரம்பரியஅரசியல்கலாச்சாரத்தைமாற்றிநாட்டைசுபீட்சத்தைநோக்கிஇட்டுச்செல்லமக்கள்எனக்கும்எங்கள்அரசாங்கத்திற்கும்மிகப்பெரும்ஆணையைவழங்கியிருக்கின்றார்கள். அந்தஎதிர்பார்ப்புகளைநிறைவேற்றநானும்எனதுஅரசாங்கமும்அர்ப்பணிப்புடன்உள்ளோம்.

தனிப்பட்டவிருப்பைவிடதிறமைக்குஇடமளிக்கும், தனிப்பட்டநலன்களுக்குமேலாகபொதுநலன்களுக்குமுதலிடம்அளிக்கும், கடனைவிடமுதலீட்டைஊக்குவிக்கும், பேச்சைவிடசெயலைமதிக்கும்வெற்றுக்கோசங்களைப்பார்க்கிலும்உண்மையானமக்கள்சேவையைமதிக்கும்ஆட்சியொன்றைஏற்படுத்துவதேஎனதுஎதிர்பார்ப்பாகும். இதற்காகஅரசியல்வாதிகளும்அரசாங்கஅதிகாரிகளும்பொறுப்புடன்செயல்படவேண்டும்.

இலங்கைமட்டுமல்ல, முழு உலகமும்வரலாற்றில்மிகமுக்கியமானஒருகாலகட்டத்தைஅடைந்துள்ளது. பலசவால்கள்எங்களுக்குமுன்னால்உள்ளன. அந்தசவால்களைவெற்றிகொண்டு, ஒருகுறிப்பிட்டகொள்கைசட்டகத்திற்குள்செயல்பட்டு, திட்டமிட்டபடிநாட்டைமுன்னோக்கிகொண்டுசெல்வதில்நாட்டைநேசிக்கும்அனைத்துஇலங்கையர்களின்ஆதரவும்எங்களுக்குதேவை.

கூட்டுமுயற்சியின்விளைவாகஎமதுநாட்டுக்குபெரும்அச்சுறுத்தலாகஇருந்தஎல்.டீ.டீ.யீபயங்கரவாதத்தைதோற்கடிக்கமுடிந்தது.

அன்றுநம்நாட்டின்பெரும்பான்மையானவர்கள்ஒரேநோக்கத்திற்காகஅர்ப்பணிப்புடன்செயற்பட்டனர்.

குழுஉணர்வுடன், ஒழுக்கப்பண்பாடுகளைமதித்துசவால்களுக்குமுகம்கொடுத்தனர். ஒருபோதும்முடிவடையாதுஎன்றுபலர்கூறியபோரைஎமக்குவெல்லமுடியும்என்றால்எதிர்காலத்தில்நாடுஎதிர்கொள்ளும்பொருளாதாரசவால்களைஎமக்குவெற்றிகொள்ளமுடியுமாகஇருக்கவேண்டும். என்றாலும்அதற்கானபொதுவானபொறுப்புஎம்அனைவருக்கும்உள்ளதுஎன்பதைநாம்புரிந்துகொள்ளவேண்டும்.

நாட்டின்உற்பத்தித்திறனைஅதிகரிக்கவும், சேவைகளைவினைத்திறனானதாகஆக்கவும், ஊழலைஒழிக்கவும், விரயங்களைகுறைக்கவும்அரசியல்வாதிகள்மற்றும்அதிகாரிகள்மட்டுமன்றிமக்களும்பங்களிக்கவேண்டும்.

நான்எப்போதும்சவால்களுக்குமுகம்கொடுத்துவெற்றிபெற்றவன். நான்அச்சுறுத்தல்களுக்குபயந்தநபர்அல்ல. பிரச்சினைகளுக்குமுகம்கொடுத்துஅவற்றைதீர்ப்பதன்றிஅவற்றிலிருந்துவிடுபட்டுஓடும்பழக்கம்என்னிடம்இல்லை.

வாக்குகளைமட்டும்எதிர்பார்த்துயாரையும்மகிழ்விக்கவேண்டியதேவைஎனக்குஇல்லை. இந்தநாட்டின்சுபீட்சமேஎனதுஎதிர்பார்ப்பு. அந்தநோக்கத்தைஅடையமனசாட்சியுடன்தேவையானஎந்தநடவடிக்கையும்எடுக்கநான்தயங்கமாட்டேன்.

நான்எனதுநாட்டைநேசிக்கிறேன். எனதுநாட்டைப்பற்றிநான்பெருமைப்படுகிறேன். என்னிடம்எனதுநாடுகுறித்தஒருதொலைநோக்குஉள்ளது. ஒருபயனுறுதிமிக்கபிரஜையாக, ஒற்றுமைஉணர்வோடு, ஒழுக்கப்பண்பாட்டுடன்செயற்பட்டு, உங்களினதும்எனதும்தாய்நாட்டைசுபீட்சத்தைநோக்கிகொண்டுசெல்வதற்குபங்களிக்குமாறுஉங்கள்அனைவரிடமும்கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள்அனைவருக்கும்மும்மணிகளின்ஆசிகள்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE