Friday 26th of April 2024 10:33:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
தேசியப்பட்டியல்: ரணிலுக்குப் பதிலாக ருவானை அனுப்ப ஐ.தே.க. உறுப்பினர்கள் கோரிக்கை!

தேசியப்பட்டியல்: ரணிலுக்குப் பதிலாக ருவானை அனுப்ப ஐ.தே.க. உறுப்பினர்கள் கோரிக்கை!


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்தால், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வெற்றிடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போதும், அவர் அதனை மறுத்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தைக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்தால், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கட்சியின் சில உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் நாடாளுமன்றத் தேசியப்பட்டியல் விடயம் தொடர்பாக அடுத்த வாரம் இறுதித் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய இராஜி நாமாக் கடிதத்தையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE